ஆக்ஷன் பட டப்பிங்கில் பிஸியான சாக்ஷி அகர்வால்

சென்னை: நடிகர் விஷால் மற்றம் நடிகை தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ஆக்ஷன் திரைப்படத்திற்கு நடிகை சாக்ஷி அகர்வால் டப்பிங் செய்து வருகிறார். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.

சாக்ஷி அகர்வால் தமிழ், கன்னடம், மலையாள சினிமாவில் நடித்தவர் இவர். தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர். இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

Sakshi Agarwal Dubbing for Sundar.C’s Action Movie

காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து இருப்பார். அதோடு, அட்லியின் ராஜா ராணி படத்தில் கூட சாக்ஷி ஒரு காட்சியில் நடித்திருப்பார். பிக்பாஸில் சாக்ஷி அகர்வால் தன்னால் முடிந்த வரை நல்ல உழைப்பை கொடுத்து இருந்தார். ஏழு வாரங்கள் வரை அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.

சாக்ஷி, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்பு, ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். அவர் சேரன் வீட்டில் எடுத்த புகைப்படங்களையும் அப்லோட் செய்து இருக்கிறார். மேலும், அவர் பிக்பாஸ் வீட்டு தோழியான ஷெரினுடன் செய்த டிக்டாக் வீடியோக்களையும் அவ்வப்போது அப்லோட் செய்து வருகிறார்.

Sakshi Agarwal Dubbing for Sundar.C’s Action Movie

தற்போது சாக்ஷி ஆக்சன் திரைப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறார். சுந்தர்.சியின் முற்றிலும் மாறுபட்ட இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் தான் ஆக்சன். இப் படத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு, அகன்ஷா புரி, ராம்கி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

இப்படத்தில் விஷாலும், தமன்னாவும் கமாண்டோ வீரர்களாக நடித்துள்ளனர். தமன்னா இப்படத்திற்காகவே ஸ்பெஷலாக கமாண்டோ பயிற்சியும் எடுத்துள்ளார். இது வரையிலும் எந்த தமிழ் படத்திலும் இடம்பெறாத வகையில் சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டப் செய்யும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பெண் போலீஸ் அதிகாரிக்கு டப் செய்வது போல் தெரிகிறது. சாக்ஷி அகர்வால் தற்போது ஜீவி.பிரகாஷுடன் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X