'எங்க கண்ணே பட்டிடும்..' அள்ளும் சேலையில் ஆச்சரிய லுக்.. பிக்பாஸ் நடிகையின் வேற லெவல் போட்டோஸ்!

By

சென்னை: பிரபல பிக் பாஸ் நடிகை சேலை கட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Recommended Video

V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL

கொரோனாவால் மொத்தமாக மூடிக் கிடக்கிறது சினிமாதுறை. படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நடிகர், நடிகைகள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருக்கின்றனர்.

சின்னத்திரை படப்பிடிப்பு

சின்னத்திரை படப்பிடிப்பு

சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இருந்தாலும் கொரோனா பீதி குப்பென்று இருக்கிறது அனைவருக்கும். படப்பிடிப்புகளில் கலந்துகொண்ட பலருக்கும் இந்த தொற்றால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் இந்த பீதி. அதோடு இந்த தொற்று வேகமாக பரவி வருவதும் காரணம்.

நடிகர், நடிகை

நடிகர், நடிகை

இந்தியாவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டுக்குள் இருக்கும் நடிகர், நடிகைகள் தங்கள் பொழுது போக்குக்காக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். வீட்டில் இருந்தபடியே, தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஒர்க் அவுட் வீடியோ

ஒர்க் அவுட் வீடியோ

சில நடிகைகள், தங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஒர்க் அவுட், நடனம் மற்றும் சமையல் செய்வது, இசைக் கருவிகளை வாசிப்பது உள்ளிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இப்படி அதிகமாக ஒர்க் அவுட் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களை ஊக்கப்படுத்தும் நடிகைகளில் ஒருவர், சாக்‌ஷி அகர்வால்!

சேலை போட்டோஸ்

சேலை போட்டோஸ்

தினமும் ஒன்று அல்லது இரண்டு ஒர்க் அவுட் வீடியோ/ புகைப்படங்களை வெளியிடும் அவர் இப்போது அழகான சேலை கட்டிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சிவப்பு மற்றும் வெள்ளை நிற சேலையில் சிவப்பு நிற பார்டர் போட்ட சேலையும் அதற்கு மேட்ச்சாக சிவப்புநிற ஜாக்கெட்டும் அணிந்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

எங்க கண்ணே

எங்க கண்ணே

பல நெட்டிசன்கள், இந்தப் போட்டோவை பாராட்டியுள்ளனர். ஒருவர், எங்க கண்ணே பட்டிடும் போலிருக்கே என்று கூறியிருக்கிறார். சிலர், அக்கா இந்த மாதிரி லுக்ல செமயா இருக்கீங்க என்று தெரிவித்துள்ளனர். ஹாட்னஸ் கொஞ்சம் கம்மிதான். இருந்தாலும் இது வேற லெவல் அழகு என்று கூறியிருக்கிறார் ஒருவர். மாடர்ன் லுக் உங்களுக்கு செட் ஆகலை. சேலைலதான் நீங்க அழகா இருக்கீங்க என்று இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஏகப்பட்ட ரசிகர்கள்

நடிகை சாக்‌ஷி அகர்வால், தமிழில், ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், அதிக பிரபலமடைந்த சாக்‌ஷிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இப்போது, ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர். சியின் அரண்மனை 3 படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X