twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சரியான ரோல்தான்.. சிண்ட்ரெல்லா படத்தில் சாக்ஷியின் கேரக்டர் இதானாம்!

    |

    Recommended Video

    பிக் பாஸில் கிடைத்த பேரை கெடுத்துக் கொண்ட ஷெரின்!-வீடியோ

    சென்னை: சிண்ட்ரெல்லா படத்தில் பிக்பாஸ் புகழ் சாக்ஷி என்ன ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    மாடல் மற்றும் டிவி தொகுப்பாளினியான சாக்ஷி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் அவர் செய்த பல விஷமத்தனங்களால் நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர்.

    அதோடு சாக்ஷியை சினேக்ஷி, விஷம், பாய்சன் என்றும் பட்டப் பெயர் வைத்து அழைத்தனர். மேலும் பாம்பு படங்களை போட்டும் அவரை கிண்டல் செய்தனர்.

    புள்ளிங்கோ.. எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ரெயின்போ சேலன்ச்!புள்ளிங்கோ.. எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ரெயின்போ சேலன்ச்!

    டெடியில் சாக்ஷி

    டெடியில் சாக்ஷி

    இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே ஆர்யா, சாயிஷா மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்து வரும் டெடி படத்தில் கமிட்டாகி இருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

    சாக்ஷி ரோல்

    சாக்ஷி ரோல்

    இந்நிலையில் ராய் லட்சுமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'சிண்ட்ரெல்லா படத்திலும் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். சிண்ட்ரெல்லா படத்தில் அவர் நடிகத்துள்ள கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    பரபரப்பை கூட்டும்

    பரபரப்பை கூட்டும்

    அதாவது ஹாரர் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சாக்ஷி அகர்வால் வில்லி ரோலில் நடித்திருக்கிறார். அவரது கதாப்பாத்திரம் படத்தில் பரபரப்பை கூட்டும் காட்சியாக இருக்கும் என தெரிகிறது.

    சரியான ரோல்தாஙன

    சரியான ரோல்தாஙன

    பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே சாக்ஷி அகர்வால் சண்டை மூட்டிவிடுவது, ஒட்டுக்கேட்பது, போட்டுக்கொடுப்பது என இருந்து வந்தார். இதனால் அவரை வில்லிப்போல் பார்த்தன நெட்டிசன்கள், அவர் வில்லி ரோலில் நடித்திருப்பதை கேட்டு சரியான ரோல்தான் என தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Sakshi Agarwal role revealed in Cinderella movie. Sakshi acting Villi role in Cinderella movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X