யாராவது இவருக்கு சான்ஸ் கொடுங்கப்பா..கலாய்த்த ரசிகருக்கு கலக்கலாய் பதில் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!

By

சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள ஒர்க் அவுட் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழில், ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் அதிக பிரபலமடைந்தார்.

 லாக்டவுன்

லாக்டவுன்

இப்போது, நடிகை ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சியின் அரண்மனை 3 படங்களில் நடித்து வருகிறார். கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த லாக்டவுனில் ஒர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்‌ஷி.

 புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இந்த போட்டோ மற்றும் ஒர்க் அவுட் வீடியோக்களை பார்க்க, பல ரசிகர்கள் அவரது சமூக வலைத்தளப் பக்கங்களை பின் தொடர்கின்றனர். இந்நிலையில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒன்று என வீடியோ, போட்டோ பதிவிட்டு வந்த அவர் இப்போது தினமும் ஒரு வீடியோ, 2 புகைப்படங்கள் என பதிவிட்டு வருகிறார். இப்போது, கடினமான ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 வாங்க முடியாது

வாங்க முடியாது

ஃபிட்டான உடலமைப்பு கொண்ட பெண், கவர்ச்சியான உடல் கொண்டவரை விட மேலானவர் என்று கூறியுள்ள சாக்‌ஷி, இதை பணத்தால் வாங்க முடியாது, இது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், சுயமரியாதை, கண்ணியம், அமைதி, ஆர்வம் ஆகியவற்றை காட்டுகிறது. அதனால்தான் இது எனக்குப் பிடித்திருக்கிறது' என்று கூறியிருக்கிறார், சாக்‌ஷி.

 சான்ஸ் கொடுங்கப்பா

சான்ஸ் கொடுங்கப்பா

கூடவே, எப்டி இந்த ஒர்க் அவுட்-டை செய்ய வேண்டும் என்றும் விளக்கி உள்ளார். இதை பலர் பாராட்டியுள்ளனர். ஒருவர், யாராவது இவருக்கு படத்துல ஒரு சான்ஸ் கொடுங்கப்பா என்று கிண்டலடித்துள்ளார். அவருக்கு பதிலளித்துள்ள சாக்‌ஷி, முதல்ல, உங்களை போன்ற ஆட்களை இன்ஸ்டாவில் இருந்து தூக்கணும்பா என்று தெரிவித்துள்ளார்.

 உங்களை நினைச்சா

உங்களை நினைச்சா

இதற்கு ஒருவர், எப்படி உங்களை பிக்பாஸ்ல இருந்து தூக்கினாங்களோ, அப்படியா? என்று கலாய்த்துள்ளார். மற்றொருவர், ஃபிட்டா இருக்கணும்தான், ஆனா, இவ்ளோ ஃபிட்டா இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். இந்த குவாரன்டைன் நேரத்தை வீணடிக்காம, ஒர்க் அவுட் பண்ணி வீடியோ போடறீங்களே, உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு' என்று கூறியுள்ளார் ஒரு ரசிகர்.

 சீக்கிரம் சிக்ஸ்பேக்

சீக்கிரம் சிக்ஸ்பேக்

'உங்க பிட்னஸை பாராட்ட வார்த்தையே இல்லை, கலக்குங்க, இப்படி பண்றதாலதான் நீங்க இன்னும் அழகா இருக்கீங்க அப்படித்தானே?' என்று கூறியிருக்கிறார் ரசிகர் ஒருவர். இன்னொருவர், 'சீக்கிரம் சிக்ஸ்பேக்கை எதிர்பார்க்கிறேன். கடினமா பண்ணுங்க' என்று கிண்டலடித்துள்ளார். சிலர், தொடர்ந்து இந்த மாதிரி ஒர்க் அவுட் வீடியோ போடுங்க என்று கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X