என்ன சிம்ரன் இதெல்லாம்? தமன்னாவை தோற்கடிச்சுட்டீங்களே.. பிக்பாஸ் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்துக்கு ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சாக்ஷி அகர்வால், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற இவர், எப்போதும் ஒர்க் அவுட் தொடர்பான புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிடுவார்.

ரசிகர் கூட்டம்
கிளாமர் போட்டோக்களையும் வெளியிடுவதும் வழக்கம். இதை பார்க்கவென்ற தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இப்போது கொரோனாவுக்காக ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பல்வேறு நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

வேகமாகப் பரவுகிறது
இந்த தொற்று நோய் காரணமாக, உலகம் முழுவதும் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் இருக்கின்றனர்.

ஒர்க் அவுட்
உடற்பயிற்சி, சமையல் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு தங்கள் நேரங்களை கழித்து வருகின்றனர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை முன்பு சில நடிகைகள் செய்து வந்தனர். இப்போது பல நடிகைகள் செய்ய தொடங்கிவிட்டனர். நடிகை சாக்ஷி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட தலையணை ஒர்க் அவுட் வீடியோ வைரலானது.

முதுகு போட்டோ
தொப்பை இல்லாத வயிறுக்கு இந்த எக்சர்சைஸ் உதவும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் முதுகு தெரிவது போல இப்போது புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் ஏராளமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு ரசிகர், ஓ இதுதான் ஜன்னல் வச்ச ஜாக்கெட்டா? சொல்லவே இல்லை' என்று கேட்டுள்ளார்.

முழுமை பெறாது
மற்றொரு ரசிகர், 'என்ன சிம்ரன் இதெல்லாம்? கவின் மிஸ் பண்ணிட்டாப்லயே?' என்று கலாய்த்துள்ளார். மற்றொரு ரசிகர், 'தினமும் போட்டோ போடறீங்க. நீங்க ஒரு போட்டோ போட்டு, நாங்க அதை பார்க்கலைன்னா, குவைரன்டைன் முழுமை பெறாது' என்று தெரிவித்துள்ளார். இன்னும் சிலர் அவரை குறை கூறியுள்ளனர். இதே வேலையாகவே இருப்பீங்களா? என்று கேட்டுள்ளனர்.

தமன்னா தோத்துட்டாங்க
இன்னொருவர், ஓ இதுக்கு பேருதான் பின் அழகா? என்றும் முதுகு போஸ்ல தமன்னா தோத்துட்டாங்க போங்க' என்றும் தெரிவித்துள்ளனர். இன்னொரு ரசிகர், சேலையில வீடு கட்டவா? என்று கேட்டிருக்கிறார். இந்த போட்டோவுல சொர்க்கத்துல இருந்து வந்த தேவதை மாதிரி இருக்கீங்க? என்று சாக்ஷியை சிலர் புகழ்ந்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அரண்மனை 3
அட்லி இயக்கிய ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சியின் அரண்மனை 3 படங்களில் இப்போது நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











