போங்க, ஒரே வெட்கம் வெட்கமா வருது.. பிக்பாஸ் நடிகையின் போட்டோஸ் பார்த்து அப்படியான ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்து, வெட்கம் வெட்கமாக வருகிறது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகைகளில் பெரும்பாலானவர்கள், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர்.
பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில், தினமும் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில் ஒரு நடிகை சாக்ஷி அகர்வால்!

புகைப்படங்கள்
பிக்பாஸ் நடிகையான இவர், ஆரம்பத்தில் ஒர்க் அவுட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இப்போது தினமும் ஒன்று, இரண்டு புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதைப் பார்ப்பவதற்காக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

சன்னி லியோன்
பலர் தாராளமாக தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒருவர், நம்மள சும்மாவே இருக்க விட மாட்டாங்க போலிருக்கே, இப்படி போட்டோ போட்டா என்ன பண்றது? என்று கூறியுள்ளார். சிலர், சன்னி லியோனுக்குப் பிறகு நீங்கதான் அவ்வளவு அழகா இருக்கீங்க? என்றும், எப்ப தலைவி லைவ்ல வருவீங்க? என்று சிலரும் கேட்டுள்ளனர்.

வடிவமைப்பு
ஒருவர், ஒன்னு சொல்லவா, நீங்க அம்சமா இருக்கீங்க? என்று வெட்கப்பட்டுக்கொண்டே தெரிவித்துள்ளார். 'தினமும் இப்படி போட்டோ போட்டு.. ஒரு முடிவோடதான் இருக்கீங்க' என்று சிலர் கூறியுள்ளனர். ஒரு நெட்டிசன், எந்த வகை ஆடைக்கும் ஏற்ற வடிவமைப்பு உங்கள் உடல் என்று புகழ்ந்துள்ளார். தலைவிக்கு சேலைதான்டா அழகு.. அதை போடுங்க சாக்ஷி என்று ஒரு பாசக்கார ரசிகர் கோரிக்கை வைத்துள்ளார்.

வெட்கம் வெட்கமா
இன்னொருவர், உங்களைப் பார்த்தா எனக்கு ஒரே வெட்கம் வெட்கமா வருது என்று கலாய்த்துள்ளார். வழக்கமான கஸ்தூரி மேடம் கமென்ட் போடுங்க, அதுக்காக வெயிட்டிங் என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். ஒருவர், 'எக்கோ, நீங்க வேற லெவல் என்றும் புன்னகைதான், உங்களுக்கு பெரிய பிளஸ் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video

சிண்ட்ரெல்லா
நடிகை சாக்ஷி அகர்வால், அட்லி இயக்கிய ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர். ராய் லட்சுமியுடன் சிண்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சியின் அரண்மனை 3 படங்களில் இப்போது நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











