நீங்க சின்ன நயன்தாரா மாதிரி அவ்ளோ அழகா இருக்கீங்க.. 'பிக்பாஸ்' பிரபலத்தை கண்டபடி புகழும் ஃபேன்ஸ்!
சென்னை: முதுகு தெரிவது போல பிக்பாஸ் நடிகை, வெளியிட்டுள்ள போட்டோவுக்கு ரசிகர்கள் கண்டபடி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
நடிகை சாக்ஷி அகர்வால், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற இவர், ஒர்க் அவுட் தொடர்பான புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

ரசிகர் கூட்டம்
கிளாமர் போட்டோக்களையும் வெளியிடுவதும் வழக்கம். இதை பார்க்கவென்ற தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இப்போது கொரோனாவுக்காக ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினமும் ஏதாவது ஒரு போட்டோ பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில நேரம் ஒர்க் அவுட் டிப்ஸ்களையும் எளிமையான எக்சர்சைஸ்கள் பற்றியும் ரசிகர்களுக்கு சொல்லி வருகிறார்.

முதுகு போட்டோ
கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட தலையணை ஒர்க் அவுட் வீடியோ வைரலானது. தொப்பை இல்லாத வயிறுக்கு இந்த எக்சர்சைஸ் உதவும் என்று அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் முதுகு தெரிவது போல இப்போது புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கண்டபடி தெரிவித்து வருகின்றனர்.

சின்ன நயன்தாரா
ஒருவர், உங்க சேலை கலருக்கும் பாடி கலருக்கும் அப்படியொரு பொருத்தம் என்று தெரிவித்துள்ளார். சில ரசிகர்கள், பளிங்கு மாதிரி இருக்கு என்று வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர், இப்படி ஒவ்வொரு நாளும் அழகாயிட்டே போனா எப்படி? என்று கேட்டுள்ளனர். ஒரு நெட்டிசன், சின்ன நயன்தாராவை பார்த்த மாதிரி இருக்கு என்று கூறியுள்ளனர்.

வடிவேலு சொல்வாரே
'இலை போடாமலே சாப்பிடலாம்னு வடிவேலு ஒரு படத்துல சொல்வாரே.. அது ஞாபகத்துக்கு வந்திடுச்சு' என்று சிலர் தெரிவித்துள்ளனர். இப்படி முதுகை காட்டி போஸ் கொடுக்கறது வெட்கமா இல்லையா? என்று சிலர் விளாசியுள்ளனர். இன்னும் சிலர் அவர் அழகை வர்ணித்துள்ளனர். இந்த போட்டோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அரண்மனை 3
நடிகை சாக்ஷி, அட்லி இயக்கிய ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சியின் அரண்மனை 3 படங்களில் இப்போது நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











