ராஜா ராணி வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்.. மனம் திறந்த சாக்ஷி அகர்வால்
சென்னை: அட்லீ கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிஸியான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் நான்கு படங்களை இயக்கியிருக்கும் அவர் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மெர்சல் செய்தது. இந்தச் சூழலில் நடிகை சாக்ஷி அகர்வால் பேசியிருக்கும் விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குறும்படம் எடுத்து அதன் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார் அட்லீ. நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். முதல் படமே மெகா ஹிட்டானது. படம் மௌனராகம் போல் இருந்தாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.

விஜய்யுடன் பயணம்: அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானாலும் பல காட்சிகளும் ஏன் படமே சத்ரியன் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இதில் பிகில் படம் தோல்வியை சந்தித்தது.
ஹிந்தியில் அட்லீ: படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் அட்லீ என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் இயக்கும் படங்கள் வசூலை அள்ளிவருகின்றன. ஷாருக்கனை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் அட்லீ. படத்துக்கு தமிழ்நாட்டில் மோசமான விமர்சனங்கள் கிடைத்தன. அதேசமயம் வட மாநிலங்களில் செம பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. இதன் காரணமாக மீண்டும் ஒரு படம் அட்லியூடன் செய்ய ஷாருக் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
தயாரிப்பாளர்: இதற்கிடையே ஹிந்தியில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியிருக்கிறார் அட்லீ. அதன்படி கீர்த்தி சுரேஷை வைத்து ஒரு படத்தை தயாரித்துவருகிறார். அதன் பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரை சுற்றி எத்தனை விமர்சனங்களும் வந்தாலும் பக்கா கமர்ஷியல் இயக்குநர் என்பதை அவர் தனது முதல் படமான ராஜா ராணி படத்திலேயே நிரூபித்துவிட்டார். அதில் எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என ஒரு நீட் கமர்ஷியல் பேக்கேஜுக்கு என்னென்ன வேண்டுமோ அத்தனை கச்சிதமாக இருக்கும்.
சாக்ஷி அகர்வால்: இந்நிலையில் ராஜா ராணி படம் குறித்து நடிகை சாக்ஷி அகர்வால் பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நான் பெங்களூரில் இருந்த சமயத்தில்தான் ராஜா ராணி பட வாய்ப்பு வந்தது. அப்போது நான் மாடலிங் செய்துகொண்டிருந்தேன். என்னுடைய காஸ்டிங் ஏஜென்சியை தொடர்புகொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது குறித்து படக்குழுவினர் பேசினார்கள்
இரண்டாவது ஹீரோயின்: என்னிடம் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார் என்றார்கள். என்னை வைத்து சில காட்சிகளே எடுத்தார்கள். பிறகு எனக்கு அழைப்பே வரவில்லை. கடைசியில் படமும் ரிலீஸ் ஆகிவிட்டது" என்றார்.
யார் இந்த சாக்ஷி: அடிப்படையில் மாடலான சாக்ஷி அகர்வாலுக்கு தமிழில் போதுவான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில படங்களில் தலைக்காட்டிய இவர் காலா படத்தில் ரஜினிகாந்த்துக்கு மருமகளாக நடித்தார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். தற்போது ஒருசில விளம்பர படங்களில் அவர் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











