'ஐயோ..என் கண்ணே பட்டுரும் போலிருக்கே..' வித்தியாசமான போஸில் பிக்பாஸ் நடிகையின் வேற லெவல் ஸ்டில்ஸ்!
சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள தாறுமாறான ஸ்டில்ஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
அட்லி இயக்கிய ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம்
ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதை ஜி.ஜே.சத்யா இயக்குகிறார்.

சண்டை பயிற்சி
இந்தப் படத்துக்காக, சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகளை மேற்கொள்கிறார். சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர், அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதற்காகவே அவர் சிறப்பு போட்டோஷுட்டையும் நடத்துவார். இதுபற்றி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.

மிரட்டல் கிளாமர்
தினமும் இரண்டு படங்கள் என வெளியிடும் நடிகை சாக்ஷி, ஒர்க் அவுட் வீடியோக்களையும் வெளியிடுவது வழக்கம். அவர் இன்று வெளியிட்டுள்ள போட்டோஸ், மிரட்டல் கிளாமராக இருக்கிறது. லேசாக படுத்துக்கொண்டு புன்னகைத்தபடி பார்ப்பதுபோலவும் வெட்கப்பட்டு சிரிப்பது போல இந்த புகைப்படங்கள் இருக்கின்றன.

பொய்க்கு முரணானது
இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் கமென்ட்களை தெரிவித்துள்ளனர். இதற்கு கேப்ஷனாக அவர், வெறுப்பவர்களை பற்றி எனக்கு கவலையில்லை. அவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் நான் பேசுகிற உண்மை அவர்களின் பொய்க்கு முரணானது. நிஜம் நிஜத்தை ஈர்க்கும். போலிகள் ஒன்றாக கூடும் என்று கூறியுள்ளார்.

எல்லை மீறாமல்
இந்த புகைப்படங்களை சிலர் திட்டியுள்ளனர். சிலர், வரவேற்றுள்ளனர். ஒருவர், எவ்வளவு போட்டோ போட்டாலும் எல்லை மீறாத கிளாமருடன் தான் உங்கள் போட்டோஸ் இருக்கிறது என்று அவரை பாராட்டியுள்ளனர். ஒருவர், அழகே பொறாமை கொள்ளும் பேரழகு என்று வர்ணித்துள்ளார். இன்னும் சிலர், என் கண்ணே பட்டுரும் போல இருக்கே என்று கூறியுள்ளனர்.

ஹோம்லி லுக்
உங்களுக்கு ஹோம்லி லுக்தான் செட் ஆகும்.. இந்த மாதிரி ஹாட் ஸ்டில்ஸ் வேண்டாம் என்று அட்வைஸ் செய்திருக்கிறார் ஒரு நெட்டிசன். வர வர உங்க அழகு கூடிட்டே போகுது என தெரிவித்துள்ளார். பலர் வழக்கம் போல ஸ்டன்னிங், செம, சூப்பர், ஆஹா, வாவ், கார்ஜியஸ் என்று வர்ணித்துள்ளனர். இதெல்லாம் வாய்ப்புக்காகத்தானே செய்றீங்க? என்று சிலர் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











