டைட்டான டிரெஸ் அணிந்து சாக்ஷி கொடுத்த செம போஸ்.. அந்த கர்ச்சிப் எல்லாம் வேற லெவல்!
சென்னை: பிக் பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் அடுத்த செட் கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.
வாரம் ஒரு போட்டோஷூட்டை எப்படியாவது நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சாக்ஷி அகர்வால்.
புலித்தோல் டிசைன் போட்ட கர்ச்சிப்பை தலையில் கட்டிக் கொண்டு செம கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

டைட்டான டிரெஸ்
வழக்கம் போல மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் சந்தானம் காமெடியில் ஒரு சிறிய காட்சியில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

டிசைன் கண்ணாடி
பழைய பட வில்லன் மாதிரி வித்தியாசமான கண்ணாடியை அணிந்து கொண்டு செம டெரராக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார் சாக்ஷி அகர்வால்.

புலித்தோல் கர்ச்சிப்
மேலும், ராக்ஸ்டார் போல தலையில் புலித்தோல் டிசைன் கர்ச்சிப்பைக் கட்டிக் கொண்டு செம ஸ்வாக் போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார் சாக்ஷி அகர்வால்.

ஒரே ஒரு ஜிப்
மேலும், ஒரே ஒரு ஜிப் வைத்த லெஹங்கா உடையை அணிந்து கொண்டும் ஸ்வீட் அண்ட் செக்ஸியாக சாக்ஷி அகர்வால் கொடுத்துள்ள போஸ் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி படத்தில் மனநல மருத்துவராக நடிகை சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார்.

இட்லி துணி
சமீபத்தில் இட்லி துணி போன்ற படு செக்ஸியான உடையை அணிந்து கொண்டு நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், மீண்டும் கிளாமர் போட்டோஷூட்டை நடத்தி தெறிக்க விட்டு வருகிறார்.

கழுத்தில் தாலி
மேலும், மணப்பெண் கோலத்தில் பட்டுப்புடவை உடுத்தி கழுத்தில் தாலி எல்லாம் தொங்கவிட்டப்படி சாக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என கமெண்ட் பக்கத்தில் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











