மனசு வலிக்கலியே அவ்வா.. அவ்வா.. மனசு துடிக்கலியே அவ்வா.. அவ்வா! இதுபுதுசாவுல இருக்கு!

Recommended Video

பிக் பாஸில் கிடைத்த பேரை கெடுத்துக் கொண்ட ஷெரின்!-வீடியோ

சென்னை: சாக்ஷி அகர்வால் உல்டாவாக பாடியுள்ள மனசு வலிக்கலியே அவ்வா அவ்வா வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷி அகர்வால் அங்கு நடைபெற்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். மற்றவர்கள் பேசுவதை அரைகுறையாக கேட்டு வந்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வந்தார்.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு இல்லவே இல்லை என சாதித்தார். இதனால் கடுப்பான மக்கள் அவரை சமூக வலைதளங்களில் ஸ்னேக்ஷி, விஷம், பாய்சன் என்றெல்லாம் அழைத்து வந்தனர்.

சாண்டியும் கவினும்

சாண்டியும் கவினும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரின் சாயம் வெளிப்பட தொடங்கவும் ஒரு நாள் கவினும், சாண்டியும் மனசு வலிக்குது அவ்வா அவ்வா, மனசு துடிக்குது அவ்வா அவ்வா என பாடிக்கொண்டிருந்தனர். அது தன்னை கிண்டல் செய்துதான் பாடுவதாக சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் பாடிக்காட்டினார்.

உல்டாவாக..

அப்போது முதல் சாக்ஷி என்ன பேசினாலும் டிவிட்டினாலும், ரசிகர்கள் மனசு வலிக்குது அவ்வா.. அவ்வா. மனசு துடிக்குது அவ்வா அவ்வா என்று கூறி கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் அந்த பாடலை உல்டாவாக ஹேப்பி மோடில் பாடி ரகளை செய்திருக்கிறார் சாக்ஷி.

படுஜாலியாக..

படுஜாலியாக..

அதாவது, பிக்பாஸ் வீட்டில் மனசு வலிக்குது அவ்வா அவ்வா என்று சோகமாக பாடிய அவர், இன்று மனசு வலிக்கலியே அவ்வா.. அவ்வா.. மனசு துடிக்கலியே அவ்வா அவ்வா.. என படு ஜாலியாகப் பாடுகிறார்.

பாம்பு படம்

இதனை பார்த்த நெட்டிசன்கள் சாக்ஷியின் வீடியோவை லைக் செய்துள்ளதோடு ரீடிவிட்டும் செய்து வருகின்றனர். மேலும் சிலர் இந்த வீடியோவையும் கிண்டல் செய்துள்ளதோடு பாம்பு படத்தை போட்டு கலாய்த்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X