வெறும் ஜாக்கெட் மற்றும் லுங்கி.. மலையாள படத்தில் சாக்‌ஷி அகர்வாலை பார்த்து சொக்கிப் போன ஃபேன்ஸ்!

சென்னை: அட்லீ இயக்கத்தில் நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்ட பலர் நடித்த ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்த சாக்‌ஷி அகர்வால் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார். ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் விஸ்வாசம், ஆர்யாவின் டெடி, லக்‌ஷ்மி ராயின் சிண்ட்ரல்லா என பல படங்களில் நடித்த இவர் சமீபத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில், அடுத்ததாக மலையாள படத்தில் நடித்து வரும் இவர் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியின் ஸ்டில் ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் சொக்கிப் போய் வித விதமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

Sakshi Agarwal wears only blouse and lungi for her upcoming Malayalam movie

இன்ஸ்டாகிராம் சென்சேஷன்: நடிகை சாக்‌ஷி அகர்வால் சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கும் இவர் ஒரு சரியான ஃபிட்னஸ் ஃப்ரீக் என்றே சொல்லலாம். சிக்ஸ் பேக் இடுப்பை எல்லாம் வைத்துக் கொண்டு இவர் வெளியிடும் புகைப்படங்கள் தாறுமாறாக ஹிட் அடித்து வருகின்றன.

மலையாள படத்தில் சாக்‌ஷி அகர்வால்: தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பல நடிகைகள் மலையாள படங்களில் நடித்து வருகின்றனர். மலையாள நடிகைகள் எல்லாம் கோலிவுட்டில் நடித்து வரும் போது இவர்கள் அங்கே செல்வதும் வழக்கமான ஒன்று தான். ஜோதிகா, ஐஸ்வர்யா மேனன் என பல நடிகைகளை தொடர்ந்து தற்போது சாக்‌ஷி அகர்வாலும் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

Sakshi Agarwal wears only blouse and lungi for her upcoming Malayalam movie

தஞ்சாவூர் மண்ணெடுத்து: இந்நிலையில், மலையாள படத்தில் பானை செய்பவராக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில் ஒன்றை பதிவிட்ட சாக்‌ஷி அகர்வால் மலையாள சினிமாவின் பாடல் காட்சி என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதை பார்த்த இவரது ரசிகர்கள் "தஞ்சாவூர் மண்ணையெடுத்து" பாடல் ரீமிக்ஸ் செய்தால் உங்க கெட்டப்புக்கு செமையா சூட் ஆகும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஜாக்கெட் மற்றும் லுங்கி: வெறும் ஜாக்கெட் மற்றும் லுங்கியை அணிந்துக் கொண்டு பானை செய்யும் விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கும் சாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் ஸ்டில்லை பார்த்த ரசிகர்கள் அந்த படம் எப்போ வருதுன்னு சொல்லுங்க தியேட்டருக்குப் போய் பார்த்துடுறோம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X