'நல்லாருக்கே.. இப்படித்தான் டிரெஸ் போடுவீங்களாக்கும்..?' கிளாமர் ஹீரோயினை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கொரோனா லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகள் வீட்டில் இருக்கின்றனர்.
அவர்களின் தற்போதைய ஒரே பொழுதுபோக்கு சமூக வலைத்தளங்கள். அதில்தான் தங்கள் நேரங்களை அதிகமாக செலவிட்டு வருகின்றனர்.

மொட்டை மாடி
வீட்டில் இருந்தபடியே, தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். சில நடிகைகள், தங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஒர்க் அவுட், நடனம் மற்றும் சமையல் செய்வது, இசைக்கருவிகளை வாசிப்பது உள்ளிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிகினி போட்டோ
இதற்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் சூப்பர், செம, வாவ், அட, ஆச்சரியமா இருக்கே, அழகு என்கிற கமென்ட்களிலும் அவர்கள் குளிர்ந்து போகிறார்கள். இதற்காக அவர்கள் தினமும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் பிகினி போட்டோக்களையும் வெளியிடுகின்றனர். இப்படி போட்டோஸ் வெளியிடும் நடிகைகளில் ஒருவர் நடிகை சாக்ஷி மாலிக்.

சூப்பர் ஹிட் பாடல்
இந்தியில் வெளியான, சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில், போம் டிக்கி டிக்கி என்ற பாடல் காட்சியில் தோன்றியதன் மூலம் பிரபலமானவர் இவர். அந்த ஒரு பாடல் காட்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்துள்ளது. இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, ஒரே நாளில், அவரது இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்தது.

கிளாமர் ஸ்டில்
பிரபல மாடலான இவர், பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவரது புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள், லைக்ஸ்களை குவிக்கின்றனர். பல ரசிகர்கள் ஜாலியான கமென்ட்களையும் பதிவிடுகின்றனர். அவர் இப்போது கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதற்கும் ஏராளமான லைக்ஸ்களும் கமென்ட்களும் குவிந்துள்ளன.

வார்த்தையே இல்லை
இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? ஏன் இப்படி டிரெஸ் போட்டிருக்கீங்க? என்று ஒருவர் கேட்டுள்ளார். உங்க அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை என்று வர்ணித்துள்ளனர். சிலர் இதுதான் குவாரன்டைன் லுக்கா என்று கேட்டுள்ளனர். சிலர் இப்படித்தான் டிரெஸ் போடுவீங்களாக்கும்? என்று கலாய்த்து வருகின்றனர். ஒரு ரசிகை, உங்களை விட நான் அழகா இருக்கேன்ல?' என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











