ஐஸ்வர்யா ராய் பற்றி மனம் திறந்த சல்மான் கான்.. வெளிப்படையா சொல்லிட்டாரு
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டர். அவர்களுக்கு ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார். கடந்த வருடம் முழுக்க அவர்களுக்கு விவாகரத்து நடக்கப்போகிறது என்று வதந்திகள் தொடர்ந்து பரவிவந்தன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கிடையே அவர் சினிமாவில் பீக்கில் இருந்தபோது சல்மான் கானை தீவிரமாக காதலித்தார். ஆனால் சில காரணங்களால் அவர்களது காதல் முறிந்தது.
உலக அழகி பட்டம் வென்று ஃபேமஸ் ஆனவர் ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் படத்தில் நடிகையாக அறிமுகமானார். அப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஐஸ்வர்யா ராயின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது பலத்த வரவேற்பை கொடுத்தார்கள். அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் கவனம் செலுத்துவதை குறைத்துக்கொண்டு பாலிவுட்டில் தனது கவனத்தை முழுவதுமாக திருப்பினார் அவர்.
முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய்: அங்கு அவருக்கு பலத்த ரெஸ்பான்ஸ் கிடைத்தது. தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்த அவர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக மாறினார். கிளாமர், ஹோம்லி என எந்த ரோல் கொடுத்தாலும் கலக்கிய அவர்; தமிழில் செலக்ட்டிவ்வாக நடித்துவந்தார். அந்தவகையில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் மட்டும் நடித்தார். அந்தப் படங்கள் ஹிட்டானாலும் ஏனோ அவர் கோலிவுட்டில் பெரிதாக ஆர்வம் எதையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக்குடன் நடந்த திருமணம்: சூழல் இப்படி இருக்க அபிஷேக் பச்சனுடன் நடித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அந்தக் காதலுக்கு அபிஷேக்கின் குடும்பமும் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார். இதுவரை சுமூகமாகத்தான் அவர்களது திருமண வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அபிஷேக்கிற்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் பிரச்னை அதன் காரணமாக அவர்கள் பிரியப்போகிறார்கள் என்றெல்லாம் கடந்த வருடம் தகவல்கள் வெளியாகின. அவை அனைத்தும் வதந்திகள்தான் என்பது பிறகு உறுதியானது.
பொன்னியின் செல்வன் நந்தினி: திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை அந்தப் படத்தில் வழங்கியிருந்தார் அவர். மேலும் அபிஷேக் பச்சனுடன் இணைந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் ஐஸ்வர்யா நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சல்மான் கானுடன் காதல்: அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னதாக சல்மான் கானைத்தான் ஐஸ்வர்யா முதலில் காதலித்தார். கிட்டத்தட்ட மூன்ரு வருடங்கள்வரை அவர்களது காதல் தொடர்ந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தக் காதல் 2002ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதற்கு காரணம் சல்மான் கான் என்று பலர் கூறுவார்கள். அதிலும் அவர் ஐஸ்வர்யா ராயை ரொம்பவே டார்ச்சர் செய்துவிட்டார் என்றும் பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய் பற்றி மனம் திறந்த சல்மான் கான்: மேலும் ஐஸ்வர்யா ராயின் வீட்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் சென்ற சல்மான் அங்கிருக்கும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததாகவும்; தனது கையை அறுத்துக்கொண்டதாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய சல்மான் கான், 'அது தொடர்பாக என்ன சொல்வது?.. நான் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பதுதான் நல்லது அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்துகொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர். ஒரு பெரிய குடும்பத்துக்கு ஐஸ்வர்யா சென்றிருக்கிறார். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
விரும்புவது இதைத்தான்: எப்போதுமே ஒரு முன்னாள் காதலர் தனது முன்னாள் காதலி சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றுதான் நினைப்பார். அப்படித்தான் நானும் நினைக்கிறேன். உங்களது எக்ஸ் லவ்வர் துயரத்தில் இருப்பதை நீங்கள் எப்போதுமே விரும்பமாட்டீர்கள் என்பதுதான் எனது கருத்து. அவர் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்" என்றார். சல்மான் கானின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











