வீரம் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கும் பீஸ்ட் ஹீரோயின்!

சென்னை : சல்மான் கான் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான ராதே திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் சல்மான் கான் விஜய்யின் மாஸ்டர் இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் அடிபட அதை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இந்நிலையில் அஜித்தின் வீரம் திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆக அதில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரபுதேவா சல்மான்கானுடன்

பிரபுதேவா சல்மான்கானுடன்

பாலிவுட்டின் வசூல் மன்னனாக இருந்து வரும் சல்மான் கானின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் இந்திய அளவில் பல்வேறு வசூல் சாதனைகளை செய்து வருகிறது. நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா உடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார். நடிப்பிலும் மிக பிஸியாக இருக்கும் பிரபுதேவா இந்தியில் சில படங்களை இயக்கியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த பிரபுதேவா அதே படத்தை இந்தியில் வாண்டட் என்ற பெயரில் இயக்கி அதில் சல்மான்கானுடன் முதல் முறையாக இணைந்தார். பிரபுதேவா சல்மான் கான் முதல் முறையாக இணைந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதன் பிறகு மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருந்தனர். தபாங் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தபாங்3 பெரும் எதிர்பார்ப்பில் பிரபுதேவாவின் இயக்கத்தில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. இருப்பினும் அடுத்தது ஒரு ஹிட்டாவது கொடுத்தாக வேண்டும் என பிரபுதேவா சல்மான்கானுடன் தொடர்ந்து அடுத்த படத்திலேயே பிரபல கொரியன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் பணியாற்றினர். ராதே என்ற பெயரில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வந்த இந்தப் படம் திரையரங்குகள் மூடப்பட்டதால் நேரடியாக ஓடிடியில் வெளியானது. சல்மான்கான் ராதே திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் செம ஸ்டைலிஷாகவும் கெத்தாகவும் காமெடியிலும் கலக்கி இருந்தார் ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை மாறாக உப்பு சப்பு இல்லாமல் இருந்ததாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கொரிய மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் இந்தி ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டதனாலேயே படத்தின் உண்மைத்தன்மை பாழாகி விட்டது என குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

கதை பிடிக்கவில்லை

கதை பிடிக்கவில்லை

ராதே படத்தை தொடர்ந்து அன்டிம் என்ற படத்தை தனது சொந்த தயாரிப்பில் தயாரித்து நடித்து வருகிறார். இந்தநிலையில் சூப்பர் ஹிட் தமிழ் படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து இருந்தது அந்த வகையில் சென்ற பொங்கல் தினத்தன்று விஜய்யின் மாஸான நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி சல்மான்கான் அதை முற்றிலும் மறுத்துள்ளார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற மாஸ்டர் இந்தி, தெலுங்கு,மலையாளம், கன்னடம், தமிழ் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உலக அளவில் 2021ல் அதிக வசூல் சாதனை படைத்த இந்திய திரைப்படம் என்ற பெயரை எடுத்திருந்தாலும் மாஸ்டர் படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை என சல்மான் கான் கூறியதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானை தவிர்த்து வேறு எந்த ஹீரோ நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்க இப்பொழுது மற்றுமொரு தமிழ் ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

வீரம் இந்தி ரீமேக்

வீரம் இந்தி ரீமேக்

அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ஹிட் அடித்து வந்த நிலையில் முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் மூலம் இந்த கூட்டணி இணைந்தது . முதல் கூட்டணியிலேயே மாபெரும் வெற்றி பெற்ற வீரம் திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஐந்து அண்ணன் தம்பிகளை மையப்படுத்திய படமாக வெளியான வீரம் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக வீரம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தமிழில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமறயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது இந்த படத்தையும் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். தமிழ் தெலுங்கை தொடர்ந்து இப்போது வீரம் இந்தியில் ரீமேக் செய்யப்பட அதில் சல்மான்கான் ஹீரோவாக நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கு முதலில் "கபி ஈத் கபி தீவாளி" என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் படத்திற்கு "பைஜான்" என்ற புதிய டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே

சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் சூப்பரான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அல்லு அர்ஜுனின் அலா வைகுண்டபுரம் படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் புட்ட பொம்மா நடிகை என பிரபலம் அடைந்த நடிகை பூஜா ஹெக்டே இப்பொழுது தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே தான் இப்பொழுது சல்மான் கானுக்கு ஜோடியாக வீரம் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பைஜான் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு அதே ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X