பப்ளிக் பிளேஸில் ராஷ்மிகாவிடம் சல்மான்கான் செய்ததை பாருங்க.. நாகரீகம் தெரியாதவரா இருக்காரே

மும்பை: பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் நடிப்பில் நேற்று வெளியான படம் சிக்கந்தர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முன்னதாக ராஷ்மிகா மகளுடன் நடிப்பேன் என சல்மான்கான் கூறியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், சல்மான்கான் ராஷ்மிகாவிடம் மோஷமாக நடந்துகொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதில், ராஷ்மிகாவை சாகடித்துவிட்டார்கள் என்றும் ரசிகர்கள் கொந்தளிக்க தொடங்கிவிட்டனர். கஜினி படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருப்பது படக்குழுவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

salman khan rashmika mandanna car viral video

தமிழ் ரசிகர்களுக்கு வேண்டுகோள்: பாலிவுட் ரசிகர்கள் அனைத்து படத்தையும் பார்த்து பாராட்டுகின்றனர். தென்னிந்திய மொழி படங்களை வரவேற்கின்றனர். படம் பிடித்திருந்தால் கொண்டாடுகின்றனர். ஆனால், தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்கள் இந்தி படங்களை பார்ப்பதே இல்லை. தென்னிந்திய ரசிகர்கள் எங்களை பார்த்தால் பாராட்டுகின்றனர். ஆனால், அவர்களை தியேட்டர் பக்கம் வரவைப்பது சவாலாக உள்ளது. ரஜினிகாந்த், ராம்சரண் ஆகியோர் மீது அன்பை வைக்கிறோம். பதிலுக்கும் எங்கள் படத்தை பார்த்து அன்பு காட்டினால் போதும் என சல்மான்கான் தெரிவித்திருந்தார்.

சிக்கந்தர் படத்தின் வெற்றியை பொறுத்தே மதராஸி படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். சிவகார்த்திகேயன் கரியரில் முக்கியமான படமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சிக்கந்தர் படத்தின் கலவையான விமர்சனத்தால் மதராஸி படத்தின் வசூலையும் பாதிக்கும் என கூறப்படுகிறது. மேலும், சிக்கந்தர் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் சல்மான்கான். பட புரோமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகாவிற்கும் உங்களுக்கும் 30 வயது வித்தியாசம் மகள் வயதில் உள்ள பெண்ணுடன் ஹீரோவாக நடிப்பதாக விமர்சிக்கப்பட்டார். பின்னர், அதற்கு பதில் அளிக்கும் விதமாக அவருடன் மட்டும் அல்ல அவர் மகளுடன் சேர்ந்து நடிப்பேன் என சல்மான்கான் பதிலடி தந்தார்.

salman khan rashmika mandanna car viral video

வைரல் வீடியோ: இதுகுறித்து ராஷ்மிகா தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. படத்தை படமாக பார்க்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில், பத்திரிகையாளர்கள் முன்பு ராஷ்மிகாவை காரில் இருந்து வழுக்கட்டாயமாக சல்மான்கான் இழுக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரில் அமர்ந்திருக்கும் ராஷ்மிகாவை சல்மான்கான் போட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காக வம்படியாக ராஷ்மிகாவை இழுக்கிறார். அவரும் நிலை தடுமாறி நிற்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு சின்ன பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது நாகரீகம் தெரியாதவர் என கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

கலவையான விமர்சனம்: ஏற்கனவே சிக்கந்தர் படத்தை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களும் இறங்கி அடிக்க ஆரம்பித்து விட்டனர். விமர்சனம் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக ரோஸ்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக சத்யராஜூவும், காஜல் அகர்வால் இல்லையென்றால் படமே வேஸ்ட் என்றும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ராஷ்மிகா படத்தில் இருக்கிறாரா இல்லையா என ஒரு பக்கம் ராஷ்மிகாவின் ரசிகர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனிடையே, ராஷ்மிகாவை சல்மான்கான் தள்ளிவிடும் வீடியோ வெளியானதை பார்த்து ச்ல்மான்கானை வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X