சல்மானிடம் எனக்கு பிடிக்காத ஒரே விஷயம் அந்த 'தி' தான்: சோனாக்ஷி
மும்பை: சல்மான் கான் தன்னை அதிகம் திட்டுவார் என்றும், அது தனக்கு பிடிக்காது என்றும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா சல்மான் கானின் தபாங் படம் மூலம் நடிகையானவர். குண்டாக இருந்த அவருக்கு தைரியம் கூறி உடல் எடையை குறைக்க வைத்து அவரை ஹீரோயின் ஆக்கியவர் சல்மான் கான்.
இந்நிலையில் சல்மான் கான் பற்றி சோனாக்ஷி கூறுகையில்,

திட்டு
சல்மானிடம் எனக்கு ஒரேயொரு விஷயம் பிடிக்காது. சில சமயம் அவர் என்னை அதிகம் திட்டுவார்.

ஷாருக், ஆமீர்
ஷாருக்கான், ஆமீர் கானுடன் சேர்ந்து நடிக்காததால் அவர்களிடம் எனக்கு பிடிக்காதது என்று எதுவும் இல்லை. அவர்கள் இருவரும் அருமையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷாருக்கான் பாலிவுட்டின் அல்டிமேட் ரொமான்டிக் ஹீரோ.

கான்கள்
ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரின் இடத்தை பிடிப்பது என்பது மிகவும் கடினமானது.

விரோதம்
எங்கள் தலைமுறையினர் மிகவும் நட்பானவர்கள். பிற நடிகைகளை பற்றி கேட்டால் நான் கருத்து தெரிவிக்க தயங்க மாட்டேன். தற்போது நடிகர், நடிகைகளிடையே விரோதம் என்பது குறைந்துவிட்டது என்றார் சோனாக்ஷி.


Click it and Unblock the Notifications











