கையில் சரக்கு பாட்டிலுடன் பிரபல நடிகை செம ரொமான்ஸ்.. வைரலாகும் போட்டோஸ்.. வாழ்த்தும் ஃபேன்ஸ்!
மும்பை: பிரபல நடிகை தனது காதலருடன் சரக்கு பாட்டிலை கையில் வைத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்தி நடிகை சலோனி சோப்ரா, இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர்.
பேஷன் டிசைன் படப்பிடிப்புக்காக இந்தியாவுக்கு வந்தவர், குறும்படம் ஒன்றில் நடித்தார்.

சினிமா அறிமுகம்
மாயா என்ற அந்த குறும்படம் கான் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டது. பின்னர் மாடலிங்கில் இறங்கினார். பிறகு எம்.டிவி சேனலில் ஒளிபரப்பான கேர்ள்ஸ் ஆன் டாப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். டிவியில் நடிக்க தொடங்கிய இவர், சல்மான் கானின் ரேஸ் 3 படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.

மீ டூ விவகாரம்
ஸ்க்ரீவ்ட் அப் உள்பட சில தொடர்களில் நடித்துள்ளார். சத்யஜித் துபே உள்பட சில பாலிவுட் நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர் சலோனி. ஹாலிவுட்டை தாக்கிய மீ டூ விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பான போது, இவரும் பிரபல இயக்குநர் சஜித் கான் மேல் பாலியல் குற்றச்சாட்டை கூறினார். சஜித் கான் மீது பல பெண்கள் பாலியல் புகாரை கூறியிருந்தனர்.

ஆஸ்திரேலியா
இது அப்போது, பரபரப்பாகப் பேசப்பட்டது. சலோனியின் புகாரை அவர் மறுத்திருந்தார். கொரோனாவுக்கு முன் ஆஸ்திரேலியா சென்றுவிட்ட சலோனி, அங்கிருந்தபடி அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அரை நிர்வாணம்
பிகினி உள்ளிட்ட கிளாமர் போட்டோக்களை பதிவிடும் அவர், அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டும் பரபரப்பை கிளப்பியவர். இதற்காகவே ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தும் சலோனி, ரசிகர்களை திணறடிப்பார். இன்ஸ்டாவில் இவருக்கும் ஏகப்பட்ட பாலோயர்கள். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

உலகம் சுற்றும் காதல்
சலோனி, SaeRah Stamps என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் பட்டாச்சாரியாவை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக உலகம் சுற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். காதலருடன் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் சலோனி, அங்கிருந்து செம கிளாமர் ஸ்டில்களை வெளியிடுவது வழக்கம்.

போட்டோ ரொமான்ஸ்
இப்போது இவர்கள் இருவரும் செக் குடியரசின் பராகுவேக்கு சென்றுள்ளனர். அங்கிருந்தபடி கலக்கலான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். கையில் சரக்கு பாட்டிலுடன் ராகுல், சலோனியை தூக்கி வைத்தபடியும் கட்டிப்பிடித்தபடியும் வெளியிட்டுள்ள ரொமான்ஸ் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கன்னத்தில் முத்தம்
அரைகுறை ஆடையில் இருக்கும் சலோனிக்கு ராகுல் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் கிக் போட்டோவும் எக்குத்தப்பாக பரவி வருகிறது. இதில், கையில் சரக்கு கிளாசுடன் இருக்கிறார் நடிகை சலோனி. இதற்கு பல நெட்டிசன்ஸ், சூப்பர் ஜோடி என்று கமென்ட் அடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











