twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிலு சிலு சலோனி! தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சிலுசிலு சிட்டு இறக்குமதியாகிறது. கேரளாவிலிருந்து அல்ல, டோலிவுட்டிலிருந்து. கேரளாவிலிருந்து அரிசி மூட்டைகளை இறக்குவது மாதிரி வாரம் ஒரு வல்லிய குட்டி வந்து இறங்கிக் கொண்டிருக்கும் காலம் இது. இப்போது, கிட்டத்தட்ட 14 கேரள நடிகைகள் தமிழ் சினிமாவை கதி கலங்க வைத்துக் கொண்டுள்ளார்கள். இவர்கள் தவிர டிவி நடிகைகள், சைட் ஆக்ரஸ்கள், கெளரவ நடிகைகள் என பெரும்பாலனவர்கள் கேரளத்தவரே. எப்போதாவது ஒரு மாற்றமாக ஆந்திரா பக்கம், கர்நாடகப் பக்கமிருந்தும் கோலிவுட்டுக்கு குட்டிகள் குதிர்வதுண்டு. அப்படித்தான் வந்து இறங்கியுள்ளார் சலோனி. மூக்கும், முழியுமாக கும்மென்று இருக்கும் சலோனி, தெலுங்கில் பிசியான நடிகை. ஆனால் அம்மணியின் மனதிலோ கோலிவுட்தான் டாப் கியரில் ஓடிக் கொண்டிருக்கிறதாம். தனது எண்ணப்படி இப்போது தமிழுக்கு வந்துள்ளார் சலோனி. மதுரை வீரன் என்ற படத்தில் ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் சலோனி. கிளாமர், குத்துப் பாட்டு என எதுவாக இருந்தாலும் போட்டுத் தாளித்து விடுவேன் என்று படு தெனாவட்டாக கூறுகிறார் சலோனி. தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்னவோ தெலுங்கில்தான். அதனால்தான் தொடர்ந்து தெலுங்கில் நடிக்க வேண்டியதாயிற்று. இருந்தாலும் நான் காத்துக் கிடந்ததற்கு பலன் இல்லாமல் போகவில்லை. மதுரை வீரன் மூலம் தமிழ் மக்களை கொள்ளையடிக்க வருகிறேன் என்று கூறி பட்டாசு போல சிரிக்கிறார் சலோனி. கிளாமராக நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. கிளாமர் இல்லாத காதல் இல்லை, காமம் இல்லாதது காதலே இல்லை என்று கூடவே தத்துவத்தையும் கொட்டிக் கொழப்புகிறார். சலோனிக்கு சொந்த ஊர் மும்பை பக்கமாம். மாடலிங் டூ டோலிவுட், அங்கிருந்து கோலிவுட் என்று வழக்கமான பாதையில் தான் இவரும் வந்திருக்கிறார்.

    By Staff
    |

    தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சிலுசிலு சிட்டு இறக்குமதியாகிறது. கேரளாவிலிருந்து அல்ல, டோலிவுட்டிலிருந்து.

    கேரளாவிலிருந்து அரிசி மூட்டைகளை இறக்குவது மாதிரி வாரம் ஒரு வல்லிய குட்டி வந்து இறங்கிக் கொண்டிருக்கும் காலம் இது.

    இப்போது, கிட்டத்தட்ட 14 கேரள நடிகைகள் தமிழ் சினிமாவை கதி கலங்க வைத்துக் கொண்டுள்ளார்கள். இவர்கள் தவிர டிவி நடிகைகள், சைட் ஆக்ரஸ்கள், கெளரவ நடிகைகள் என பெரும்பாலனவர்கள் கேரளத்தவரே.


    எப்போதாவது ஒரு மாற்றமாக ஆந்திரா பக்கம், கர்நாடகப் பக்கமிருந்தும் கோலிவுட்டுக்கு குட்டிகள் குதிர்வதுண்டு.

    அப்படித்தான் வந்து இறங்கியுள்ளார் சலோனி.

    மூக்கும், முழியுமாக கும்மென்று இருக்கும் சலோனி, தெலுங்கில் பிசியான நடிகை. ஆனால் அம்மணியின் மனதிலோ கோலிவுட்தான் டாப் கியரில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.


    தனது எண்ணப்படி இப்போது தமிழுக்கு வந்துள்ளார் சலோனி. மதுரை வீரன் என்ற படத்தில் ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் சலோனி.

    கிளாமர், குத்துப் பாட்டு என எதுவாக இருந்தாலும் போட்டுத் தாளித்து விடுவேன் என்று படு தெனாவட்டாக கூறுகிறார் சலோனி.

    தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்னவோ தெலுங்கில்தான். அதனால்தான் தொடர்ந்து தெலுங்கில் நடிக்க வேண்டியதாயிற்று.


    இருந்தாலும் நான் காத்துக் கிடந்ததற்கு பலன் இல்லாமல் போகவில்லை. மதுரை வீரன் மூலம் தமிழ் மக்களை கொள்ளையடிக்க வருகிறேன் என்று கூறி பட்டாசு போல சிரிக்கிறார் சலோனி.

    கிளாமராக நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. கிளாமர் இல்லாத காதல் இல்லை, காமம் இல்லாதது காதலே இல்லை என்று கூடவே தத்துவத்தையும் கொட்டிக் கொழப்புகிறார்.

    சலோனிக்கு சொந்த ஊர் மும்பை பக்கமாம். மாடலிங் டூ டோலிவுட், அங்கிருந்து கோலிவுட் என்று வழக்கமான பாதையில் தான் இவரும் வந்திருக்கிறார்.

      Read more about: saloni in kollywood
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X