தம்மடிக்கும் காட்சிகள்தான் சவாலாக இருந்தன!- சலோனி லுத்ரா
தென்னிந்திய சினிமாவில் பிற மொழி, குறிப்பாக மும்பை நாயகிகள் வரவும் அதிகம், வந்ததும் அவர்களுக்கு மவுசும் அதிகம்.
அந்த வரிசையில் இப்போது வந்திருப்பவர் சலோனி லுத்ரா. சரபம் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தவர். குறிப்பாக எதிர்மறை வேடத்தில் எடுப்பாகவே இருந்தது அவர் நடிப்பு.
கதக் நடனத்தில் தேர்வு பெற்ற சலோனி நடிப்பில் தியேட்டர் எனப்படும் பயிலரங்குகளில் பயிற்சி பெற்றுள்ளார்.

சலோனி
மும்பையில் திரை கலைஞர்களுக்கான ஒரு விருது வழங்கும் விழாவில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் கபூருடன் இணைந்து நடனம் ஆடினார் சலோனி. அப்போது ரன்வீர், 'உன் கவனத்தை திரை உலகம் பக்கம் திருப்பு' என சலோனிக்கு அட்வைஸ் பண்ணாராம். அதுதான் திரையுலகுக்கு தன்னை வரவழைத்தது என்கிறார் சலோனி.

சரபம்
பிரபல தயாரிப்பாளரான சி.வி. குமார் தயாரிப்பில் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனது தன்னுடைய பாக்கியம் எனும், சலோனி, 'சரபம்' கதாபாத்திரத்தை வடிவமைத்த இயக்குனர் அருண் குமார் அந்த பாத்திரத்துக்கு உயிர் ஊட்டியதை போலவே தன்னுடைய நடிப்பு பயணத்துக்கும் உயிர் ஊட்டியதை நினைவு கூர்கிறார்.

விக்ரம்தான் காரணம்
தனது முதல் பட அனுபவம் பற்றி சலோனி கூறுகையில், "சரபம்' படத்தில் நான் இந்த அளவுக்கு நடித்திருக்கிறேன் என்றால், அந்த பாத்திரத்தின் வெற்றிக்கு நடிகர் விக்ரமுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

அந்நியன் பாணி
தமிழில் நான் பார்த்த படங்களில் பிடித்தது விக்ரமின் அந்நியன்தான். நொடியில் முகம் மாறும் அந்த நடிப்புதான் எனக்கு உந்துதல். படத்தில் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது புகை பிடிக்கும் காட்சிகள்தான். எனக்கு அந்தப் பழக்கம் இல்லை என்பதால் நான் பல்வேறு படங்களில் கதாநாயகிகள் புகை பிடிப்பதை பார்த்து எனெக்கென ஒரு பாணியை வைத்து கொண்டேன்.

இனி சென்னையில்தான்
சென்னையின் சூழ்நிலையும், தமிழ் சினிமாவும் பிடித்து விட்டதால் இங்கேயே குடி இருக்கலாம் என முடிவும் செய்துள்ளேன். இதுவரை எனக்கு வரும் வாய்ப்புகள் எல்லாமே 'சரபம்' படத்தின் பாத்திரம் போலவே உள்ளன. அதைத் நான் தவிர்க்க விரும்புகிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்கவே எனக்கு விருப்பம்,' என்றார்.


Click it and Unblock the Notifications











