»   »  மீண்டும் தோல் அலர்ஜி... சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் சமந்தா!

மீண்டும் தோல் அலர்ஜி... சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் சமந்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் தோல் அலர்ஜி காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்கிறார் நடிகை சமந்தா.

இந்த வாரம் முழுக்க பல்வேறு காரணங்களுக்காக செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறார் சமந்தா.

Samanth to go Singapore for treatment

சில தினங்கள் ஓய்வு என அறிவித்ததிலிருந்து, அவரைப் பற்றி எதிர்மறைச் செய்திகள் ஏராளம் பரவி வருகின்றன.

இப்போது அவர் எதற்காக ஓய்வை அறிவித்தார் என்பதற்கான புதிய காரணத்தை மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன.

அதன்படி, சமந்தா தோல் அலர்ஜிக்காக சிகிச்சைப் பெறச் செல்வதால்தான் இந்த ஓய்வை அறிவித்திருக்கிறாராம்.

மணிரத்னம் இயக்கிய கடல் மற்றும் ஷங்கரின் ஐ படங்களில் நடிக்கும் வாய்ப்பை சமந்தா இழந்தது நினைவிருக்கலாம். காரணம் இந்த தோல் ஒவ்வாமைதான்.

அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்ற பிறகு 6 மாதங்கள் சினிமா லைட் படாமல் ஓய்விலிருந்த பிறகுதான் அவருக்கு குணமானது. அதன் பிறகு அவர் நடித்த படம் அஞ்சான்.

தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வந்தார்.

இப்போது மீண்டும் அவருக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாம். படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் விளக்குகளின் அதிக வெப்பத்தால் அலர்ஜி ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தததால், விளக்கு வெளிச்சத்தைக் குறைத்து படப்பிடிப்பை நடத்தினர்.

இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு தெலுங்குப் படத்தை முடித்துக் கொடுத்ததும் மீண்டும் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லப் போகிறாராம் சமந்தா. சில தினங்கள் சிகிச்சைப் பெற்ற பிறகு திரும்புகிறாராம். இந்தப் பயணத்துக்காகத்தான் புதுப் படங்களை ஒப்புக் கொள்வதைத் தவிர்த்து வந்தாராம். அக்டோபருக்குப் பிறகுதான் புதுப் படங்களுக்கு கால்ஷீட் தந்திருக்கிறாராம்.

Read more about: samantha, சமந்தா
English summary
Actress Samantha has decided to fly Singapore for Skin Allergy treatment.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil