ஜானுவாக நடிக்கும் சமந்தா: 96 ரீமேக் தான் ஆனால் இல்லை
ஹைதராபாத்: 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு ரீமேக்கையும் பிரேம் குமாரே இயக்குகிறார்.

தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் நடிக்கிறார்கள். தமிழை போன்று இல்லாமல் தெலுங்கு ரீமேக் சர்வானந்த், சமந்தாவின் பள்ளி காலத்து காட்சிகளை மையமாக கொண்டு இருக்காதாம்.
96க்கு பதிலாக 2009ம் ஆண்டில் கதை நடப்பது போன்றும், சமந்தா-சர்வானந்தின் கல்லூரி காலத்து காதலை மையமாக வைத்து படத்தை எடுக்கிறார்கள். படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











