ஓ பேபி ... கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் - கவலைப்படும் சமந்தா

சென்னை: சமந்தா நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியான ஒ பேபி என்ற திரைப்படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது தமிழில் மொழி பெயர்த்து வரும் ஆக்ஸ்டு 15ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

2010ஆம் ஆண்டு வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா என்ற தமிழ் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரத் தொடங்கினார். 2012ஆம் ஆண்டில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியான நான் ஈ படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

சமந்தா தமிழ், தெலுங்கு என இரு மொழி திரைப்படங்களிலும் உச்சத்தில் இருக்கும்போதே நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவார் என்று நினைத்த வேளையில், சமந்தாவுக்கு திருமணத்திற்கு பின் வந்த அனைத்து படங்களும் வசூலை அள்ளியதோடு மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றது.

 ஓ பேபி

ஓ பேபி

அதே போல் தற்போது சமந்தா தெலுங்கு மொழியில் நடித்து கடந்த ஜூலை 5ஆம் தேதி வெளிவந்த ஓ பேபி (Oh Baby) திரைப்படமும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் கொரிய திரைப்படமான மிஸ் கிரான்னி (Miss Granny) என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.

 ரசிகர்கள் கட் அவுட்

ரசிகர்கள் கட் அவுட்

ஓ பேபி திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெற்றதை அடுத்து அந்தப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். அதற்காக நடிகை சமந்தாவின் ரசிகர்கள் இப்போதே அந்த திரைப்படத்திற்கு கட் அவுட் வைக்க ஆரம்பித்து விட்டனர்.

 கவலையில் சமந்தா

கவலையில் சமந்தா

இது பற்றி ஓ பேபி திரைப்படத்தின் கதாநாயகியாக இருக்கும் சமந்தாவிடம் கேட்கும்பொழுது, இதே மாதிரி தான் தமிழில் வெளிவந்த யு டெர்ன் (U Turn) திரைப்படத்திற்கும் ரசிகர்கள் கட் அவுட் வைத்தார்கள். அந்த திரைப்படம் எதிர் பார்த்த அளவுக்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. அதே போல் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறாமல் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது என்று கூறினார்.

 ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

ஆனாலும் இந்த திரைப்படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அது மட்டுமின்றி இந்த திரைப்படத்தின் டீஸர் வெளிவந்த பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதனால் தமிழ் மொழியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X