நீங்க என்ன பண்ண போறீங்க?.. ராஜ் நிடிமோருவுக்கு இப்படி ஒரு ஆர்டரை சமந்தா போட்ருக்காங்களே.. செம க்யூட்
சென்னை: நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் சில நாட்களுக்கு முன்பு ஈஷா யோகா மையத்தில் திருமணம் நடந்தது. இரண்டு பேருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திருமண வாழ்க்கை போன்று இதிலும் எந்தப் பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் ராஜ் நிடிமோருவுக்கு சமந்தா க்யூட்டாக ஆர்டர் போட்ட வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்த சமந்தா; தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். அவருக்கு ஆரம்பத்தில் குடும்பத்திலிருந்து முழு சப்போர்ட்டும் கிடைத்ததாக தெரிகிறது. ஆனால் ஒருகட்டத்தில் சின்ன சின்ன பிரச்னை எழ ஆரம்பிக்க; அது நாளடைவில் பெரிய விரிசலாக மாறியது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே இனி ஒத்துவராது என்று முடிவு செய்து விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள்.
இரண்டாவது திருமணம்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா அடுத்ததாக நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். அந்தக் காதலுக்கும் சம்மதம் கிடைத்ததை அடுத்து அவர்களுக்கு கடந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் வைத்து திருமணம் செய்துகொண்டார். சமந்தாவோ தனது அடுத்த ரிலேஷன்ஷிப் குறித்து எதுவும் தெரிவிக்காமல் நடிப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் கவனம் செலுத்தினார்.

ராஜுடன் காதல்: அதேசமயம் அவர் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலிக்கவும் செய்திருக்கிறார். இரண்டு பேரும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு டூர் செல்வது, இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வருவது என இருந்தார்கள். ராஜுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவும், ராஜும் ஜோடியாக வலம் வருவதை வைத்து அவர்கள் காதலிப்பதாக பலரும் உறுதியாக சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஈஷா யோகா மையத்தில் திருமணம்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் வைத்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்தில் உறவினர்களும், இரண்டு பேருக்கும் நெருக்கமான நண்பர்களும் கலந்துகொண்டார்கள். இரண்டு பேருக்கும் நடந்த திருமணத்துக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தார்கள். சமந்தாவும் முழு மகிழ்ச்சியுடன் இருந்தார்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் சமந்தா - ராஜ் நிடிமோரு தொடர்பான பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சமந்தாவுடன் வந்த ராஜ், சேனல் ஒன்றிடம் பேசும்போது சமந்தாவை பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்தார். அதற்கு சமந்தாவோ உடனே குறுக்கிட்டு, 'நீங்கள் என்ன பண்ண போறீங்க என்று மட்டும் சொல்லுங்கள். என்னை பற்றி கட் கட்" என்று க்யூட்டாக ஆர்டர் போட்டார். இந்த வீடியோதான் இப்போது அதிகம் பகிரப்பட்டுவருகிறது.


Click it and Unblock the Notifications











