சமந்தா மாதிரி பொண்ணு வேணும்… ஆசையை சொன்ன சதீஷ் ஒத்துக்கொண்ட சமந்தா

By Mayura Akilan

அது என்னவோ கதாநாயகிகள் மீது காமெடியன்களுக்கு ஒரு தனி ஆசைதான் வந்து விடுகிறது. உடன் நடிக்கும் கதாநாயகிகளை கலாய்ப்பதற்கு சந்தானம், சூரி வரிசையில் சதீஷும் இணைந்து விட்டார்.

காமெடியன்களின் ஆசைக்கு கதாநாயகிகளும் இப்போது மறுப்பு சொல்வதில்லை.

சமந்தா மாதிரி பொண்ணு

சமந்தா மாதிரி பொண்ணு

கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய சதீஷ், நான் சமந்தா மாதிரியான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

கல்யாணம் பண்ணிக்கிறேன்

கல்யாணம் பண்ணிக்கிறேன்

அதற்கு சமந்தா சதீஷிடம் நீ ஆசைப்படுவது போல் உன்னையே கல்யாணம் கட்டிக்கிறேன் என்று மேடையில் பகிரங்கமாக கூறினார். சமந்தா கூறியதை கேட்டதும் சதீஷ் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஒளிர்ந்தது.

விஜய்க்கு ஜோடி

விஜய்க்கு ஜோடி

விழாவில் பேசிய சமந்தா, ‘ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் இவர்கள் கூட்டணியில் கத்தி படம் உருவாக இருப்பதாக தகவல் தெரிந்ததும் இதில் விஜய் ஜோடியாக யார் நடிக்கப் போறாங்க என்ற ஆர்வமும். நான் நடிக்க வேண்டும் என்றும் ஆசையும் இருந்தது.

விமானத்தில் பறந்தேன்

விமானத்தில் பறந்தேன்

அந்த சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் எனக்கு போன் செய்து கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீ தான் நடிக்க வேண்டும் என்று கூறியது. எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. உடனே மும்பையில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸை பார்க்க விமானத்தில் பறந்து வந்தேன்' என்று கூறினார். இப்படித்தான் அஞ்சானில் சூர்யா கூட நடிக்கும் போது கூறினார் சமந்தா. எப்படியோ கத்தி ஓடினார் சரிதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X