என்ன சம்மு இதெல்லாம்.. சிகப்பு சேலை கட்டிக்கிட்டு.. இப்படி செம்ம ஹாட்டா போஸ் கொடுத்துருக்கீங்க!

Recommended Video

Samantha Shocking outfit in Zee cine Awards | Jaanu | Samantha

சென்னை: த்ரிஷாவுக்கு பிறகு தற்போது ஜானு அவதாரம் எடுத்துள்ள சமந்தா, சிகப்பு சேலை கட்டியபடி செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹாட்டாக சேலை கட்டுவது எப்படி என்று மற்ற நடிகைகளுக்கு சமந்தா ஸ்பெஷல் கோர்ஸே கொடுக்கலாம் போல அந்த அளவுக்கு இதில் மாஸ்டர் ஆகியுள்ளார்.

சமந்தா நடிப்பில், 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வருகிறது.

டோலிவுட் ஜானு

டோலிவுட் ஜானு

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் தான் ஜானு படத்தையும் இயக்கியுள்ளார். ராம் ஆக சர்வானந்தும், ஜானுவாக சமந்தாவும் நடித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வருகிறது.

சிகப்பு சேலை

இந்நிலையில், ஜானு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் சமந்தா, தனது சமூக வலைதள பக்கத்தில் சேலையில் செம்ம ஹாட்டாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளார். தற்போது சிகப்பு மற்றும் பிங்க் கலர் கலந்த சேலையில் படு கிளாமராக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

குவிகிறது லைக்ஸ்

சற்றுமுன் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரெட் கலர் சேலையில் செம்ம ஹாட் ஆக இருக்கும் புகைப்படங்களுக்கு பல லட்ச லைக்குகள் குவிந்து வருகின்றன. கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவிற்கு இன்ஸ்டாவில் 9 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

டிரைலர் லான்ச்

சமீபத்தில் வெளியான ஜானு படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் சமந்தா வெளிர் நிற சேலையில், செம்ம செக்ஸியாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. ஹாட் ஆகவும் க்யூட் ஆகவும் சமந்தா இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

ஸ்கூல் பிசினஸ்

ஸ்கூல் பிசினஸ்

சினிமாவை தாண்டி மேலும், சில விஷயங்களிலும் நடிகை சமந்தா தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அண்மையில் தனது தோழிகளுடன் இணைது ஹைதராபாத்தில் Ekam எனும் ஆரம்ப பள்ளி ஒன்றை துவங்கி உள்ளார். ஏற்கனவே Pratyusha என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி பெண்களுக்கான மருத்துவ செலவுகளை ஏற்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X