சமந்தாவுக்கு 39ஆவது பிறந்தநாள்.. சம்முவோட மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?.. மிரள வைக்கிறாங்க
சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டவர். ஆனால் திருமணம் ஆகி சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்தவர்கள் சில காரணங்களால் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறினார்கள். அதற்குப் பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இயக்குநர் ராஜ் நிடிமோருவை சமந்தா திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இன்று அவர் தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. இங்கு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த அவர் தெலுங்கிலும் தனது கவனத்தை திருப்பினார். அதன்படி கெளதம் இயக்கத்தில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது அவர்கள் இருவரும் காதல் மலர்ந்தது. சைதன்யாவின் குடும்பம் பாரம்பரியமிக்க மிகப்பெரிய குடும்பம் என்பதால் முதலில் இந்த திருமணத்திற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு நாக சைதன்யா தீவிரமாக இருந்ததன் காரணமாக அவர்கள் குடும்பத்தினர் இந்த காதலை திருமணத்தில் முடிக்க சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர்.

பிரிந்த ஜோடி: திருமணத்திற்கு பிறகும் சமந்தா தனது நடிப்பில் பிஸியாக இருந்தார்.சைதன்யாவும் அதற்கு முழுக்க முழுக்க சப்போர்ட் செய்தது தெரிந்தது. ஆனால் ஒருகட்டத்துக்கு மேல் சமந்தா நடிப்பதில் நாகர்ஜுனாவின் குடும்பத்திற்கு விருப்பம் இல்லாமல் போனது. ஆனால் சமந்தா தொடர்ந்து விருப்பப்பட்டதும் பிரச்னையின் முதல் புள்ளி என்று கூறப்பட்டது. பிறகு நாளடைவில் இந்த பிரச்னை பெரிதாக பெரிதாகி அவர்கள் இரண்டு பேரும் பிரியும் நிலைமையை உருவாக்கிவிட்டது.
சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம்: சமந்தாவிடமிருந்து பிரிந்த சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதேபோல் சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமோருவை கடந்த வருடத்தின் இறுதியில் ஈஷா யோகா மையத்தில் வைத்து திருமணம் செய்தார். இப்போது கணவருடன் செம ஹேப்பியாக இருக்கிறார். அவரை விட்டுவிட்டு என்னால் ஒருநாள் கூட இருக்க முடியாது; அதேபோல்தான் அவரும். என்னை விட்டு இருக்கமாட்டார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமந்தாவின் கரியர்: திருமணத்துக்கு பிறகும் நடிக்கும் முடிவில்தான் சமந்தா இருப்பதாக தெரிகிறது. அடுத்ததாக மா இன்ட்டி பங்காரம் என்ற படம் வரவிருக்கிறது. அதனை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். மேலும் சில வெப் சீரிஸ்களில் நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்குவதற்கு அவர் முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் சூழலில் சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
சமந்தாவின் சொத்து மதிப்பு: அதன்படி சினிமாவில் நடிக்க 5 கோடி ரூபாயும், வெப் சீரிஸில் நடிப்பதற்கு 10 கோடி ரூபாயும் சம்பளமாக வாங்குகிறார் என திரைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் மொத்தம் 110 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும்; சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் சொகுசு பங்களாக்களையும் வைத்திருக்கிறார். லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர் (தலா இரண்டு கோடி மதிப்பு), போர்ஷ் கேமேன் ஜிடிஎஸ் (1.46 கோடி), ஜாக்குவார், பென்ஸ், ஆடி க்யூ 7 ஆகிய சொகுசு கார்களும் வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications