twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமந்தாவுக்கு சமூக அக்கறை நிறையவே இருக்கு.. சூர்யாவை தொடர்ந்து கல்வி சேவையில் களமிறங்கிய சமந்தா!

    |

    Recommended Video

    Samantha Shocking outfit in Zee cine Awards | Jaanu | Samantha

    ஹைதராபாத்: நடிகை சமந்தா தனது தோழியர்களுடன் இணைந்து குழந்தைகளுக்கான கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

    அதற்கான பெயர் மற்றும் லோகோவை நேற்று தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சமந்தா.

    பெண்களுக்கான Pratyusha NGO அமைப்பை கடந்த 2012ம் ஆண்டு முதல் நடத்தி வரும் சமந்தா, தற்போது குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார்.

    தமிழ் ரசிகர்களை தியேட்டர்களில் மிரட்டி வரும் சைக்கோ.. அடுத்த மாதம் டோலிவுட்டை மிரட்டப் போகுது!தமிழ் ரசிகர்களை தியேட்டர்களில் மிரட்டி வரும் சைக்கோ.. அடுத்த மாதம் டோலிவுட்டை மிரட்டப் போகுது!

    சமந்தா

    சமந்தா

    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் கடந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்திய சமந்தா, தெலுங்கில் மஜ்லி மற்றும் ஓ பேபி என இரண்டு பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்தார்.

    சமூக அக்கறை

    சமூக அக்கறை

    சும்மா சினிமாவில் நடித்து பணம் சம்பாதித்தால் மட்டும் போதும் என்று நினைக்காமல் நடிகை சமந்தா சமூக அக்கறையிலும் அதிக நாட்டத்தை கொண்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு அவர் தொடங்கிய Pratyusha NGO குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தேவையான மருத்துவ செலவுகளை ஏற்று பல உயிர்களை காப்பாற்றி உள்ளது.

    கிறிஸ்துமஸ் தாத்தா

    கிறிஸ்துமஸ் தாத்தா

    அதுமட்டுமின்றி கடந்த 2018ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்த சமந்தா அவர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். மேலும், கிறிஸ்துமஸ் தாத்தா போல அவர்களுக்கு தேவையான துணிகள் மற்றும் விரும்பிய பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்து அசத்தினார்.

    கல்வி துறையில் காலடி

    கல்வி துறையில் காலடி

    அகரம் அறக்கட்டளை தொடங்கி நடிகர் சூர்யா பல ஏழை மாணவர்களை படிக்க வைத்து உதவி செய்து வருகிறார். இந்நிலையில், சூர்யாவை தொடர்ந்து நடிகை சமந்தாவும் கல்வி சேவையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தனது நண்பர்களான ஷில்பா மற்றும் முக்தா ஆகியோருடன் இணைந்து Pre-School கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    குவிகிறது வாழ்த்து

    குவிகிறது வாழ்த்து

    ஹைதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸில் சமந்தா தொடங்கியுள்ள Ekam கல்வி நிறுவனம் குறித்த தகவலை அறிந்த சமந்தா ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். சினிமாவை தாண்டி சமூக அக்கறையுடன் புதிய பாதைகளில் பயணம் செலுத்தி வரும் சமந்தாவுக்கு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்த ஆண்டு

    இந்த ஆண்டு

    பாலிவுட் வெப் சீரீஸான தி ஃபேமிலி மேன் 2ம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள நடிகை சமந்தா, வரும் காதலர் தினத்தை முன்னிட்டு தெலுங்கில் வெளியாகவுள்ள ஜானு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். தமிழில் வெளியான 96 படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம் குமார் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

    English summary
    Sam took to her social handle and revealed about her partnership with Shilpa and Mukta to start a new project which she termed as a step towards her passion.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X