»   »  திரையில் மட்டுமல்ல, பொது இடங்களிலும் நான் அப்படித்தான்! - சமந்தா

திரையில் மட்டுமல்ல, பொது இடங்களிலும் நான் அப்படித்தான்! - சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவாவில் புத்தாண்டு கொண்டாட தோழிகளுடன் சென்றிருந்தார் சமந்தா. படுகவர்ச்சியான உடையில் போயிருந்த அவர், பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தோழியுடன் கோவா தெருக்களில் ஒரு ரவுண்ட் வந்தார்.

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் கோவாவுக்கு வந்திருந்த பயணிகள்.

தெலுங்கு விருது விழா ஒன்றில் முழு முதுகையும் காட்டியபடி உடை அணிந்து வந்தார். விழாக் குழுவினர் எல்லோர் கண்களும் அவர் முதுகிலேயே நிலை கொண்டிருந்தன.

இப்படி போகுமிடங்களிலெல்லாம் கவர்ச்சி காட்டுவது பப்ளிசிட்டிக்காகவா என்று கேட்டால், "சேச்சே... அதெல்லாம் இல்லை. உண்மையிலேயே எனக்கு கவர்ச்சியாக இருப்பது பிடிக்கும்.

எப்போதும் நான் சிரித்த முகமாய் இருக்கிறேன் என்பார்கள். சிறு வயதில் இருந்தே நான் அப்படித்தான். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். அதுவே முகத்துக்கு அழகை தரும். சிலர் கேமரா முன்னால் மட்டுமே சிரிப்பார்கள். மற்ற நேரம் இறுக்கமான முகத்தோடு இருப்பார்கள்.

நடிகைகளை பொறுத்த வரை திரையிலும் பொது இடங்களிலும் அழகான தோற்றத்தோடு இருக்க வேண்டும். எனவேதான் நான் கவர்ச்சியான உடையில் வருகிறேன்," என்றார்.

    English summary
    Samantha says that she is always wish to keep her sexy look in reel and real.
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil