அட்லீ படத்தில் விஜய்க்கு ஜோடி சமந்தா - எமி?
விஜய்யின் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வியோடு மீடியாவில் கொஞ்ச நாளைக்கு செய்தி வரும்.
கிட்டத்தட்ட அரை டஜன் பாலிவுட் - கோலிவுட் நாயகிகளின் பெயர்களை வைத்து மீடியா பரபரத்துக் கொண்டிருக்க, அதற்கு சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு நாயகியை அறிவிப்பார்கள்.
சிம்பு தேவன் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கப் போகும் அவரது 59வது படத்தின் நாயகிகள் யார் யார் என்று இப்போது வழக்கத்தை விட அதிகமாக எழுதப்பட்டு வருகிறது.

நயன்தாரா
இந்தப் படத்தில் முதலில் நயன்தாரா நடிப்பார் என்றார்கள். பின்னர் இதனை நயன்தாராவே மறுத்துவிட்டார்.

சோனாக்ஷி
அடுத்து சோனாக்ஷி சின்ஹா மற்றும் தீபிகா படுகோன் நடிப்பார்கள் என்றார்கள். இப்போது அந்த இருவரும் வேறு தமிழ்ப் படங்களில் நடிப்பதாக இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

எமி ஜாக்ஸன்
விஜய்யுடன் ஜோடி சேரப் போகிறார்கள் என இப்போது கூறப்படுபவர்கள் எமி ஜாக்ஸன் மற்றும் சமந்தா.

சமந்தா
சமந்தா ஏற்கெனவே கத்தியில் விஜய்யுடன் டூயட் பாடிவிட்டார். எமிதான் புதுவரவு. இந்த இருவராது இறுதித் தேர்வாக இருக்குமா.. தொடருமா.. பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











