39 வயது சமந்தா.. 41 வயது டிடி நீலகண்டன்.. ப்பா.. இவங்க ரெண்டு பேருக்கும் வயசே ஆகாது போல!

சென்னை: எங்கள் தங்கம் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நடிகை சமந்தாவை சந்தித்து டிடி நீலகண்டன் பேட்டி எடுத்துள்ளார். அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்களை டிடி நீலகண்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய அது தற்போது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் வெள்ளித்திரையில் நடிகையாகவும் அசத்திய டிடி நீலகண்டன் தனது கால் பிரச்னை காரணமாக முன்பு போல அதிக ஷோக்களை நடத்த முடியவில்லை என்றாலும், நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளை அவ்வப்போது பேட்டி எடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார்.

Samantha and DD Neelakandan shines after all obstacles like a real Queens
Photo Credit:

மா இன்டி பங்காரம் என தெலுங்கில் சமந்தா தயாரிப்பில் உருவாகி உள்ள ஃபேமிலி ஆக்‌ஷன் என்டர்டெயினர் படம் தமிழில் எங்கள் தங்கம் என்கிற டைட்டிலில் இந்த வாரம் வெளியாக காத்திருக்கிறது.

ரோஸ் மில்க் குடிக்கப் போலாமா?: கத்தியில் செல்ஃபி புள்ள, தெறியில் ஃபிளாஷ்பேக் காட்சியில் டாக்டராக நடித்த சமந்தா மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் அஞ்சு ரூபா டாக்டராக நடித்த போது ரோஸ் மில்க் குடிக்கப் போலாமா எனக் கேட்பார். அதையெல்லாம் தற்போது மீண்டும் ரீ கால் செய்து சமந்தாவை தளபதி ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். சென்னையில் தனது படத்தை புரமோட் செய்ய வந்த நிலையில், முதல் வேளையாக முதலமைச்சர் விஜய்யை சமந்தா சந்தித்ததன் விளைவு தான் இதெல்லாம் என்கின்றனர்.

Samantha and DD Neelakandan shines after all obstacles like a real Queens
Photo Credit:

அவர் அப்பவே அப்படி: முதலமைச்சராக அவர் ஆனது எல்லாம் எனக்கு ஆச்சர்யமே இல்லை. அவருடன் 3 படங்கள் பணியாற்றியுள்ளேன். அவர் எப்போதுமே ரொம்பவே எதிர்கால சிந்தனையுடன் செயல்படக்கூடிய மனிதர் தான். கண்டிப்பாக நல்லாட்சியை தருவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என சமந்தா முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு பேசியுள்ளார்.

டிடி நீலகண்டன் உடன் சமந்தா: தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி நீலகண்டன் பல ஆண்டுகளாக நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளுடன் நல்ல நட்பில் உள்ளார். சென்னைக்கு வந்த சமந்தாவை சந்தித்து டிடி நீலகண்டன் சந்தித்த நிலையில், இருவரும் சேலை அணிந்துக் கொண்டு எடுத்த க்யூட்டான போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. இருவருக்கும் வயதே ஆகாதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பல தடைகளை கடந்து வாழ்வில் சாதிக்கும் பெண்கள் இருவரும் ஒரே ஃபிரேமில் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X