நாக சைதன்யாவுக்கு பதிலடி கொடுக்க சமந்தாவின் ஸ்கெட்ச்?.. 2வது திருமணம் இந்த மாதத்திலா?

சென்னை: நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றுக்கொண்டார். எதிர் தரப்பிலிருந்து 200 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக தருகிறோம் என்று சொல்லியும் அதனை சமந்தா வாங்க மறுத்துவிட்டார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் இயக்குநர் ராஜுவை காதலித்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தனது கரியரை தொடங்கிய சமந்தா; தெலுங்கு திரையுலகத்துக்கும் சென்று நடித்தார். அப்படி நடித்தபோது நாக சைதன்யாவுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. வீட்டு சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்திவந்தார் அவர்.

விவாகரத்து செய்த சமந்தா: இப்படிப்பட்ட நிலைமையில் திடீரென இரண்டு பேருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. நாள்போக்கில் சரியாகிவிடும் என்று நினைத்திருந்தால்; அது மேற்கொண்டு பெரிதாகி விவாகரத்தில் வந்து நின்றது. அந்த விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை சொன்னார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே மௌனம் மட்டுமே காத்து அதை கடந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha and director Raju to get married in October
Photo Credit:

சைதன்யாவுக்கு திருமணம்: சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு சிங்கிளாக இருந்த நாக சைதன்யா; நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். அவரது இரண்டாவது காதலுக்கும் சம்மதம் தெரிவித்த நாகார்ஜுனா; உடனடியாக நிச்சயதார்த்தத்தையும், திருமணத்தையும் நடத்திவைத்தார். ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் கடந்த வருடம் பிரமாண்டமாக அவர்களது திருமணம் நடந்தது. சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை அடுத்து; சமந்தாவும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கைக்ளை வைக்க ஆரம்பித்தார்கள்.

காதலில் விழுந்த சமந்தா?: நிலைமை இப்படி இருக்கு ஃபேமிலி மேன், சிட்டாடல் ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர்களான ராஜ்&டிகேவில் ராஜை சமந்தா இப்போது காதலித்துவருவதாக கூறப்படுகிறது. அவர்கள் இரண்டு பேரும் ஜோடியாக வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்றுவருகிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடுவதை வழக்கமாக்கியிருக்கிறார். அதையெல்லாம் பார்த்த ரசிகர்களோ கண்டிப்பாக இது காதல்தான் என்று உறுதியாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ராஜுவுக்கு ஏற்கனவே திருமணம்: இது ஒருபக்கம் இருக்க ராஜு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். சமந்தாவும், ராஜுவும் ஜோடியாக வெளிநாடு சென்றுவருவதை பார்த்த அவரது முன்னாள் மனைவி தன் பங்குக்கு மறைமுகமாக இரண்டு பேரையும் தாக்கி இன்ஸ்டாவில் போஸ்ட்டுகளை போட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு புகைந்துகொண்டிருக்கும் இந்த விஷயம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க வாய்ப்புகள் இருப்பதாக திரைத்துறையில் பேச்சுக்கள் ஓட ஆரம்பித்திருக்கின்றன.

சமந்தா - ராஜூ திருமணம்?: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ராஜுவும், சமந்தாவும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள் எனவும்; அவர்களது திருமணம் முதலில் ஆகஸ்ட்டில் நடப்பதாக இருந்தது. ஆனால் அக்டோபர் மாதம் திருமணத்தை நடத்த சமந்தா முடிவெடுத்திருக்கிறார். ஏனெனில் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் அக்டோபர் மாதத்தில்தான் திருமணம் நடந்தது. எனவே அதே மாதத்தில் இரண்டாவது திருமணத்தை செய்து அவருக்கு பதிலடி கொடுக்கும் பிளானில் சாம் இருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X