வடபோச்சே.. பாலிவுட் வொர்க்கவுட் ஆகல.. மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பிய கீர்த்தி சுரேஷ், சமந்தா?

சென்னை: தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டுக்கு செல்வதும், பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படங்களில் நடிப்பதும் காலம் காலமாக நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சில நடிகைகளுக்கு அந்த சேஞ்ச் ஓவர் கைகொடுக்கும். ஆனால், ஒரு சில நடிகைகளுக்கு காலை வாரி விட்டுவிடும். இந்தி படத்தில் நடிக்க பல ஆண்டுகளாக தவம் கிடந்து வந்த 2 நடிகைகள் தற்போது கோலிவுட் தயாரிப்பாளர்களின் கதவுகளை தட்டி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த கீர்த்தி சுரேஷ், சமந்தா அப்படியே தெலுங்கு சினிமாவிலும் கலக்கினர். அங்கிருந்து ஃபிளைட் பிடித்து மும்பைக்கு போய் பாலிவுட் நடிகையாக மாறிவிட வேண்டும் என்கிற பெருங்கனவுடன் கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்தனர்.

இதில், கீர்த்தி சுரேஷுக்கு அட்லீ தயவால் அவரது தயாரிப்பில் வெளியான பேபி ஜான் எனும் இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சமந்தாவுக்கு இந்தி வெப்சீரிஸ்கள் மட்டுமே கிடைத்தன.

samantha keerthy suresh heroine

சென்னை திரும்பிய சமந்தா: அக்‌ஷய் குமார் அலேக்காக சமந்தாவை பாலிவுட் நிகழ்ச்சியில் தூக்கிக் கொண்டு சுற்றியதை எல்லாம் பார்த்த ரசிகர்கள் தி ஃபேமிலி மேன் 2வுக்குப் பிறகு சமந்தா பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக பல பெரிய படங்களில் அவர் நடிப்பது மிஸ் ஆகிவிட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சென்னையில் சுற்றி வரும் சமந்தா சீக்கிரமே பெரிய தமிழ் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்ப்பொண்ணு கீர்த்தி சுரேஷ்: அஜய் தேவ்கனின் மைதான் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிகமாக குறைத்து ஓடுபோல கீர்த்தி சுரேஷ் மாறிய நிலையில், அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்து ரொம்பவே ஃபீல் செய்தார். ஆனால், தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு படமாவது பண்ண வேண்டும் என போராடிய அவர், கடந்த ஆண்டு தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் தமிழில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் அவருக்கு வெற்றிப் படமாக அமையவில்லை. இந்நிலையில், தமிழ்ப் பொண்ணு மோடுக்கு மாறி அடுத்து தான் நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா படத்தை கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறாராம்.

samantha keerthy suresh heroine

நயன்தாராவுக்கு பெரிய வெற்றி: தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்றதில் நடிகை நயன்தாரா தான் ஷாருக்கான் படத்தில் நடித்து 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் ராணியாகவும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்திலும் அவருக்கு செம சூப்பரான ரோல் எனக் கூறுகின்றனர். தமிழிலும் இந்த ஆண்டு அவருக்கு வரிசைக் கட்டி பல படங்கள் காத்திருக்கின்றன.

samantha keerthy suresh heroine

காஜல் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் சல்மான் கானை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் சிக்கந்தர் படத்திலும் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று ராஷ்மிகா மந்தனா கலக்கி வரும் நிலையில், காஜல் அகர்வாலுக்கும் சிக்கந்தர் படம் பெரிய ஹிட் படமாக மாறும் என்கின்றனர்.

samantha keerthy suresh heroine

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X