கேம் ஓவர் இயக்குநர்.. லீடு ரோலில் சமந்தா.. மிரட்டும் வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்ததாக கேம் ஓவர் இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்பந்தாமி உள்ளாராம்.

நயன்தாராவின் மாயா மற்றும் டாப்ஸியின் கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன், சமந்தா லீடு ரோலில் நடிக்க உள்ள ஹாரர் த்ரில்லர் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிகர் பிரசன்னா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்ப்பமா இருக்காரா?

கர்ப்பமா இருக்காரா?

நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடப் போவதாகவும், பல வதந்திகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. ஆனால், சமந்தா அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தனது அடுத்த இலக்கை நோக்கியும், புதிய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மீண்டும் விஜய்சேதுபதி

மீண்டும் விஜய்சேதுபதி

கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேம்பு எனும் போல்டான ரோலில் நடித்து பாராட்டுக்களை பெற்ற நடிகை சமந்தா, மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மிஸ்ஸான வெற்றி

மிஸ்ஸான வெற்றி

தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்திலேயே, தெலுங்கில் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டு, சமந்தா, சர்வானந்த் நடிப்பில் ஜானுவாக வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றி பெறவில்லை.

லீடு ரோல்

லீடு ரோல்

நடிகை நயன்தாரா பாணியில் பல நடிகைகள், ஹீரோ இல்லாமல், ஹீரோயினை மையமாக வைத்து பல படங்களில் நடித்து வருகின்றனர். கன்னடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி ஹிட்டான யு-டர்ன் படத்தை தமிழில் சமந்தா நடித்திருந்தார். ஆனால், அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் லீடு ரோலில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

கேம் ஓவர் இயக்குநர்

கேம் ஓவர் இயக்குநர்

இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கி உள்ள படங்கள் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளன. நயன்தாரா லீடு ரோலில் நடித்த மாயா மற்றும், டாப்ஸி நடிப்பில் வெளியான கேம் ஓவர் படங்களை இயக்கியுள்ளார். தற்போது, சமந்தாவை வைத்து ஹாரர் த்ரில்லர் படம் ஒன்றை இயக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Amazing Recreation | Ravi Varma | Suhashini maniratnam | Amirtha Ram | Calender 2020
வில்லன் யார்?

வில்லன் யார்?

பானா காத்தாடி படத்திற்கு பிறகு, நடிகை சமந்தாவுடன், பிரசன்னா இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். அருண் விஜய்க்கு வில்லனாக அவர் நடித்துள்ள மாஃபியா திரைப்படம் இன்று வெளியாகி, வெற்றிநடை போட்டு வரும் நிலையில், மீண்டும் ஒருமுறை வில்லனாக தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்ட உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X