Samantha: சமந்தாவுடன் நெருக்கமான புகைப்படம்.. ஒருவழியா கமிட் ஆகிட்டாங்களா?
சென்னை: நடிகை சமந்தாவின் விவாகரத்திற்கு பின்னர் அவரது விவாகரத்து குறித்து எந்த அளவுக்கு விவாதிக்கப்பட்டதோ, அதே அளவுக்கு அவருக்கும் வேறு யாராவதுக்கும் காதல் ஏற்பட்டதா என்ற பேச்சுக்களும் அடிபட்டு வந்தது. ஆந்திரா அரசியல்வாதி ஒருவர் அவரது விவாகரத்து குறித்து பேசிய பேச்சுக்கு இணையத்தில் காட்டமான பதிலடி கொடுத்திருந்தார் சமந்தா. இப்படி இருக்கையில் அவர் தற்போது ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஓடிடி வருகைக்குப் பின்னர் சமந்தா பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டார். சென்னை பொண்ணு, பல்லாவரம் பொண்ணு என்று எப்போதும் மகிழ்ச்சியாக சொல்லிக் கொள்ளும் சமந்தா இந்திய அளவில் மிகவும் தைரியமான நடிகை. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது, அதன் பின்னர் விவாகரத்து என்பது எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஆண்டில் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டர். ஆனால் சமந்தா இரண்டாவது திருமணம் இன்னும் செய்து கொள்ளவில்லை.

காதலா?: அவ்வப்போது சமந்தா அந்த நடிகருடன் காதலில் இருக்கிறார், அந்த இயக்குநர் உடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று எல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது. அதேபோல் இப்போது ஒரு புகைப்படத்தை பார்த்து சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் காதலில் இருக்கிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள். இந்த பேச்சுக்கு காரணம், சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமொருவை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படம் தான். இயக்குநர் ராஜ் நிடிமொரு தான் ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இயக்குநர். இந்த படத்தில் சமந்தா மிகவும் நெருக்கமான காட்சிகளில் எல்லாம் நடித்தார். இப்படி நடித்ததும் அவரது விவாகரத்துக்கு ஒரு காரணம் என சிலர் பேசி வந்தார்கள்.

நெருக்கமான புகைப்படம்: இந்நிலையில் இவர்கள் இருவரும் கட்டிப் பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள், விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று தெரிவித்து வருகிறார்கள். சிலரோ இந்த தகவலை நம்பி, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வெகு சிலர் மட்டும் தான் ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் அடுத்த பாகமா இல்லை வேறு படம் ஏதாவது தொடங்க உள்ளீர்களா என்று பலரும் கேட்டு வருகிறார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. ஃபேமிலி மேன் இயக்குநர் ராஜ் நிடிமொரு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











