கர்ப்பத்தை அறிவித்த சமந்தா! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த 'மா இன்டி பங்காரம்' தேங்க்ஸ் மீட்
ஹைதராபாத்: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற 'மா இன்டி பங்காரம்' (Maa Inti Bangaram) திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், தனது கர்ப்பத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததுடன், இனி சில காலம் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கடந்த சில மாதங்களாக சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. குறிப்பாக அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், தனது குடும்ப வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதுகுறித்து சமந்தா எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தார்.
இப்படி இருக்கையில், 'மா இன்டி பங்காரம்' படத்தின் தேங்க்ஸ் மீட்டில் பேசிய சமந்தா, தனது கர்ப்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், "நான் தற்போது மெட்டர்னிட்டி லீவ் செல்ல இருக்கிறேன்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் அரங்கத்திலேயே உற்சாகமாக கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் சமந்தாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை மீதும் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏற்கனவே தனது முதல் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்த பிறகு, வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்ட சமந்தா, அதன் பின்னர் மீண்டும் மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அவரது இரண்டாவது திருமண வாழ்க்கையில் இயக்குநர் ராஜ் நிதிமோருவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இந்த தம்பதியர் கர்ப்பமாக இருக்கும் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மற்றொருபுறம், சமந்தா சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுக்க உள்ளதாக கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்த அவர், தற்போது தனது குடும்ப வாழ்க்கைக்கும், தாய்மைப் பயணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 'மா இன்டி பங்காரம்' திரைப்படத்தின் வெற்றியுடன் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டிருப்பது, அவரது ரசிகர்களை மேலும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
திரை வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என பல போராட்டங்களையும், சவால்களையும் கடந்து வந்த சமந்தா, தற்போது தாய்மையின் புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளார். அவரது கர்ப்ப அறிவிப்பும், மெட்டர்னிட்டி லீவ் குறித்த தகவலும், ரசிகர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியாக பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications