கையில் குழந்தையுடன் ஹைதராபாத்தில் சமந்தா.. யார் வீட்டுக்கு போயிருக்காங்க பாருங்க

ஹைதராபாத்: நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு விவாகரத்து பெற்றுவிட்டார்கள். நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சமந்தா பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தச் சூழலில் தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தா குறித்து அவதூறாக பேசினார். அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சூழலில் சமந்தாவின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது உடன் நடித்த நாக சைதன்யாவை காதலிக்க ஆரம்பித்தார். அவர்களது காதலுக்கு முதலில் சைதன்யாவின் வீட்டில் ஒப்புதல் கிடைக்காததால் சில காலம் திருமணத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துகொண்டார்கள். கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் திருமணம் ஜோராக நடந்தது.

samantha nagarjuna

விவாகரத்து: திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். அவருக்கு நாக சைதன்யாவும் முழு சப்போர்ட் செய்ததாக தெரிகிறது. ஆனால் சமந்தாவின் நடிப்பு பயணத்தை நாகார்ஜுனா குடும்பம் விரும்பாததால் சில பிரச்னைகள் ஆரம்பத்தில் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக சில வருடங்களுக்கு முன்பு தங்களது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சி கிளப்பினார்கள்.

துலிபாலாவுடன் திருமணம்: இதனையடுத்து மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்ட சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இப்படி சைதன்யாவும், சமந்தாவும் தத்தமது வழிகளில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா அவதூறாக பேசினார்.

அமைச்சர் அவதூறு: அதாவது, 'கேடிஆருக்கு சமந்தா என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் மீது ஆசைப்பட்டார். அதற்கு நாகார்ஜுனாவும் ஒத்துக்கொண்டார். அவர்கள் இருவரது விவாகரத்துக்கு இதுதான் காரணம். கேடிஆரால் பல சினிமா நடிகைகள் விரைவில் திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார்கள்' என்று சொன்னார். அவரது இந்தப் பேச்சு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமந்தாவும் காட்டமான பதிலடியை கொடுத்தார்கள். அவர் மட்டுமின்றி ஜூனியர் என்.டி.ஆர், நாகார்ஜுனா, அமலா என ஏராளமானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

சின்மயி வீட்டில் சமந்தா: இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி ஆலியா பட் நடித்திருக்கும் ஜிக்ரா படத்தின் ப்ரோமோஷன் நடந்தது. அதில் சமந்தா கலந்துகொண்டார். அப்போது சமந்தாவை ரொம்பவே புகழ்ந்தார் ஆலியா.இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு சின்மயி வீட்டுக்கு சென்ற சமந்தா அங்கு சின்மயின் குழந்தையை தூக்கி கொஞ்சும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X