எந்தக் காதலும் இப்படி வராது.. நாக சைதன்யாவின் 2ஆவது திருமணம்.. அட்டாக் செய்த சமந்தா?
சென்னை: நாக சைதன்யா நடிகை சமந்தாவை பிரிந்த பிறகு சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்தது. திருமணத்துக்கு பின்பு இரண்டு பேரும் ஸ்ரீசைலம் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் ட்ரெண்டாகின. சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் சமந்தா இன்னமும் சிங்கிளாகத்தான் இருக்கிறார். இந்தச் சூழலில் சமந்தா போட்டிருக்கும் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோல் ஏற்றிருந்த அவர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அறிமுகமான சிறிது காலத்திலேயே சரசரவென்று முன்னேறிய அவர் விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன் பிறகு தமிழில் அவர் முன்னணி நடிகை என்ற இடத்தை பெற்றார். தமிழில் மட்டும் வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்த அவரது மார்க்கெட் தெலுங்கிலும் நல்ல இடத்தை பிடித்தது.

சைதன்யாவுடன் காதல்: அப்படி அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இருவீட்டு சம்மதத்துடன் இரண்டு பேரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். அது நாகார்ஜுனாவின் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
விவாகரத்து: சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்பட்டன. இருந்தாலும் இரண்டு பேரும் அமைதி காத்தார்கள். இதற்கிடையே சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோயும் வந்தது. எனவே சினிமாவிலிருந்து ஒதுங்கி சிகிச்சை மேற்கொண்டார். அந்த சிகிச்சையிலிருந்து மீண்ட அவர் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது.
அடுத்தடுத்த படங்கள்: சிட்டாடல் வெப் சிரீஸில் அவரது நடிப்பு பெரிதும் கொண்டாடப்பட்டது. அதிலும் சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் பட்டையை கிளப்பியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தார்கள். அதுமட்டுமின்றி லிப் லாக் சீனிலும் நடித்திருந்தார் சாம். சிட்டாடலில் தனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு அவரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதன் காரணமாக அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் சில படங்களில் நடிப்பதற்கு அவர் கமிட்டாகியிருக்கிறார்.
இரண்டாவது திருமணம்: இது ஒருபக்கம் இருக்க சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு நடந்தது. இதில் திரையுலக பிரபலங்களும், குடும்பத்தினரும் கலந்துகொண்டார்கள். இந்தத் திருமணத்துக்கு நாகார்ஜுனாவின் குடும்பம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது.
சமந்தாவின் பதிவு: நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டது குறித்து சமந்தா எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் தனது நாய் சாஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'எந்தக் காதலும் சாஷாவின் காதல் போல் வராது' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்களோ இந்தப் பதிவில் மறைமுகமாக நாக சைதன்யாவை சமந்தா சீண்டியிருக்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











