சமந்தாவை காண கடப்பாவில் அலைமோதிய ரசிகர்கள்.. ஷாப்பிங் மால் திறந்து வைத்த புகைப்படங்கள் வைரல்!
சென்னை: நடிகை சமந்தா கடப்பாவில் ஷாப்பிங் மால் திறந்து வைத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
சமந்தாவை காண ஆயிரக் கணக்கில் ரசிகர்கள் அந்த இடத்தில் திறண்டதால் அந்த இடத்தில் டிராபிக் நெரிசல் ஏற்பட்டது.
பிங்க் நிற பட்டு புடவை மற்றும் நகைகள் அணிந்து அழகு சிலையாக கடை திறப்பு விழாவுக்கு வந்த சமந்தா ரசிகர்களுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஷாப்பிங் மால் திறப்பு விழா
ஆந்திர மாநிலம் கடப்பாவில் இன்று நடைபெற்ற ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் நடிகை சமந்த கலந்து கொண்டு ஷாப்பிங் மாலை திறந்து வைத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களை பார்த்து கையசைத்த சமந்தாவின் புகைப்படங்கள் தீயாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

பட்டுப் புடவையில் சமந்தா
பிங்க் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஆன பெரிய பார்டர் பட்டுப்புடவையில் அழகாக ஜொலித்த சமந்தா பீட்ஸ் வைத்த கழுத்தை ஒட்டிய தங்க நகையை அணிந்து கொண்டு அட்டகாசமாக காட்சியளித்தார். ஷாப்பிங் மாலை திறந்து வைக்க டாப் ஓப்பன் செய்யப்பட்ட காரில் பவனி வந்த நடிகை சமந்தாவை காண ஏகப்பட்ட ரசிகர்கள் அணி திரண்டனர்.

அலைமோதிய கூட்டம்
நடிகை சமந்தா கடப்பாவில் உள்ள ஷாப்பிங் மாலை திறக்க வராங்க என்கிற செய்தி அறிந்ததும் ஒட்டுமொத்த இளைஞர்களும் சமந்தாவை காண பெருங்கூட்டமாக அலைமோதிய புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. சமந்தாவின் வருகையால் அந்த இடத்தில் பெரும் டிராபிக் நெரிசல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபிளையிங் கிஸ்
ஷாப்பிங் மால் திறந்து வைக்க வந்த நடிகை சமந்தா ரசிகர்களை பார்த்து கை அசைத்தபடியும், தலை வணங்கி நன்றி தெரிவித்தும் ஃபிளையிங் கிஸ் கொடுத்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சமந்தாவின் தெலுங்கு படமான சகுந்தலம் படத்திற்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சொந்த ஊர்
கணவர் நாக சைதன்யாவை பிரிந்த நிலையில், நடிகை சமந்தா மும்பைக்கு குடி பெயர்ந்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால், அதனை அதிரடியாக மறுத்த நடிகை சமந்தா ஆந்திரா தான் என் சொந்த ஊர் என பகிரங்கமாக பதிலடி கொடுத்து இருந்தார். கோலிவுட், பாலிவுட் மற்றும் சர்வதேச லெவலுக்கு சென்றாலும் டோலிவுட் ரசிகர்களுக்காக தொடர்ந்து படம் பண்ணுவார் என்பது நிதர்சனமான உண்மை.

ஐட்டம் டான்ஸ்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் பாடல் "ஓ சொல்றியா" வெறித்தனமான ஹிட் அடித்து சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதுவரை ஐட்டம் டான்ஸ் பாடல்களில் நடனமாடாத சமந்தா முதல் முறையாக திரையரங்குகளை தெறிக்க விட காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











