50 கோடி திருடி என படு ஆபாசமாக விமர்சித்த நெட்டிசன்.. பதிலுக்கு சமந்தா என்ன சொன்னார் தெரியுமா?

ஹைதரபாத்: நடிகை சமந்தாவை படு மோசமாக கமெண்ட் செய்த நெட்டிசனுக்கு சமந்தா அளித்துள்ள பதில் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா பட பாடலுக்காக முதல் முறையாக ஐட்டம் நம்பரில் நடனம் ஆடியுள்ளார் நடிகை சமந்தா.

யூடியூபில் வேற லெவல் ஹிட் ஆகி உள்ள அந்த பாடல் குறித்து பல வித விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், நடிகை சமந்தாவை நெட்டிசன்கள் ஆபாசமாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

குத்தாட்டம் போட்ட சமந்தா

குத்தாட்டம் போட்ட சமந்தா

க்யூட் நடிகையாக நடித்து வந்த நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 படத்தில் பாயும் புலியாக மாறி ரசிகர்களை மிரட்டினார். இந்நிலையில், அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் முதன்முறையாக ஐட்டம் நம்பருக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். லிரிக் வீடியோ 66 மில்லியன் வியூக்களையும் வீடியோ புரமோ பாடல் 14 மில்லியன் வியூக்களையும் கடந்து சக்கை போடு போடுகிறது.

எதிர்ப்பும் ஆதரவும்

எதிர்ப்பும் ஆதரவும்

சமந்தாவின் குத்தாட்ட பாடல் ஆண்களுக்கு எதிரான வரிகளுடன் இடம்பெற்றுள்ளது என புகார்கள் கொடுக்கும் அளவுக்கு சென்று நல்ல புரமோஷனை செய்து விட்டது. நாக சைதன்யாவின் அக்கினேனி குடும்பம் மறைமுகமாக சமந்தாவின் குத்தாட்ட பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் ஏகப்பட்ட தகவல்கள் கிளம்பின. அதே நேரத்தில் நடிகை சமந்தாவின் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆபாசமான கமெண்ட்

ஆபாசமான கமெண்ட்

புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை சமந்தாவின் குத்தாட்ட வீடியோ பாடல் 4 நாட்களில் 4.9 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது என நெட்டிசன் ஒருவர் போட்ட ட்வீட்டுக்கு கீழ் கமராலி துகாந்தர் எனும் நெட்டிசன் நடிகை சமந்தாவை விமர்சித்து படு மோசமாக பதிவிட்டுள்ள கமெண்ட் நடிகை சமந்தாவின் கண்களிலேயே பட்டுள்ளது.

50 கோடி திருடி

50 கோடி திருடி

விவாகரத்து செய்து கொண்டு வாழ்க்கையையே கெடுத்துக் கொண்ட செகண்ட் ஹேண்ட் ஐட்டம் நடிகை சமந்தா என்றும் ஜென்டில்மேனிடம் இருந்து 50 கோடி ரூபாயை வரி இல்லாமல் திருடிய திருடி என்றும் மிகவும் கீழ்த்தரமாக கமெண்ட் செய்துள்ளார்.

சமந்தா பதிலடி

சமந்தா பதிலடி

இந்த கமெண்ட்டை பார்த்த நடிகை சமந்தா அவருக்கு சரியான பதிலடி தரும் வகையில் செம கூலாக போட்டுள்ள ரிப்ளை ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. "Kamarali Dukandar God bless your soul" (கடவுள் உங்கள் ஆன்மாவை ரட்சிக்கட்டும்) என நடிகை சமந்தா தன்னை பற்றி படு மோசமாக விமர்சித்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

தப்பா பேசினாலும் தமிழ்ல தான் பேசுவேன் | Pushpa Tamil pressmeet
கண்டுகாதீங்க

கண்டுகாதீங்க

இதுபோன்ற கீழ் தரமான நெகட்டிவ் கமெண்ட்டுகளை கண்டுகாதீங்க சமந்தா. உங்கள் மனம் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பது உங்களுக்குத் தான் தெரியும். உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதனை தொடர்ந்து செய்யுங்கள் உயர்ந்து செல்லுங்கள் என சமந்தா ரசிகர்கள் ஆதரவு கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X