»   »  நித்யா.. பிந்து.. மித்ரா.. பட்டையைக் கிளப்பும் பல்லாவரம் பொண்ணு! #HBDSamantha

நித்யா.. பிந்து.. மித்ரா.. பட்டையைக் கிளப்பும் பல்லாவரம் பொண்ணு! #HBDSamantha

Subscribe to Oneindia Tamil
சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDSamantha

சென்னை : தமிழ், தெலுங்கு திரையுலகில் இன்று டாப் நடிகையாக இருக்கும் சமந்தா திரைக்கு வந்தது தற்செயலாகத்தான். தோழி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்துத்தான் அவருக்கு மாடலிங் வாய்ப்பு வந்தது.

அதைத் தொடர்ந்து விளம்பரங்களில் நடிக்கும்போது, ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் கண்ணில் பட்டு அவர் இயக்கிய 'மாஸ்கோவின் காவிரி' மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் இந்த பல்லாவரம் பொண்ணு. அதற்குள் இவர் அடுத்ததாக கதாநாயகியாக நடித்த 'பாணா காத்தாடி' படமும் வெளிவந்தது.

படங்களில் நடிப்பது போக, விளம்பரங்கள், கடைத் திறப்பு விழாக்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தை 'பிரத்யுஷா டிரஸ்ட்' எனும் அமைப்பின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைகளுக்கும், மருத்துவ செலவுகளுக்கும் பயன்படுத்தி வருகிறார் சம்மு.

ஏ மாய சேஸாவே - ஜெஸ்ஸி

ஏ மாய சேஸாவே - ஜெஸ்ஸி

கௌதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஏ மாய சேஸாவே' படத்தில் நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து நடித்தனர். இப்படத்தின் மூலமாக தெலுங்கு ரசிகர்களின் மனதில் ஜெஸ்ஸியாகவே பதிந்து போனார் சமந்தா. இந்தப் படத்தின் மூலம் சைதன்யா - சமந்தா நட்பும் உருவானது. மீண்டும் 'மனம்' படத்தில் இருவரும் இணைந்து நடித்து கலக்கலான கெமிஸ்ட்ரியை நிரூபித்தனர்.

நான் ஈ - பிந்து

நான் ஈ - பிந்து

'நான் ஈ' படத்தில் பிந்துவாக கண்களால் காதல் மொழி பேசும் கேரக்டர் சமந்தாவுக்கு. துரத்தித் துரத்திக் காதல் உணர்த்தும் நாயகன் நானியிடம் நேரடியாகக் காதலைத் தெரியப்படுத்தாமல் அவர் இருக்கும்போது தவிர்த்தலும், இல்லாதபோது ஏங்குவதுமாகத் தன் காதலைத் தெரிவித்திருப்பார். சுதீப்பை காணும்போதெல்லாம் பயத்தோடு கடந்தபடியும், நானியைக் காதலோடு நாணியபடி கடந்தும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் சமந்தா.

நீ தானே என் பொன்வசந்தம் - நித்யா

நீ தானே என் பொன்வசந்தம் - நித்யா

'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் வெவ்வேறு காலகட்டங்களிலான கேரக்டர்களில் அநாயசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சமந்தா. ஸ்கூல் பெண்ணாக ஜீவாவை திகட்டக் திகட்டக் காதலிப்பது, ஈகோ மோதலால் விட்டுப் பிரிவது, காதலனின் திரும்புதலுக்காகக் காத்திருப்பது, வந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் தொலைவில் நின்று தவிர்ப்பது, தனக்கு இனி அவன் எப்போதும் இல்லை எனத் தெரிந்தபின்பு ஏக்கப்படுவது என காதலின் பல்வேறு காலகட்டங்களை காட்சிக்குக் கொண்டுவந்தார் நித்யாவாக வாழ்ந்த சமந்தா

பத்து எண்றதுக்குள்ள - ஷகீலா

பத்து எண்றதுக்குள்ள - ஷகீலா

இப்படத்தில் ஷகீலா எனும் குறும்புத்தனமான ரோலில் பப்ளி சமந்தாவாக பட்டையைக் கிளப்பியிருப்பார். விக்ரமுடன் சேர்ந்து அதகளம் செய்யும் சமந்தா, இன்னொரு ரோலில் ஆக்‌ஷன் பக்கம் தாவி வாள் சுழற்றி அதிரடி காட்டியிருப்பார். இரண்டு கேரக்டர்களுக்குமிடையே ஓராயிரம் வித்தியாசம் இருக்கும். இரண்டிலும் தனது வெர்சடைல் திறமையைக் காட்டியதுதான் சமந்தாவின் ஸ்டைல்.

தெறி - மித்ரா

தெறி - மித்ரா

'கத்தி' படத்தில் விஜய்க்கு ஜோடியான சமந்தா, 'தெறி' படத்தில் மித்ராவாக விஜய்க்கு மீண்டும் ஜோடியானார். 'தெறி' படத்தில் அவர் காட்டியது காதலின் அடுத்த நிலை. அழகான காதலியாக, அன்பான மனைவியாக, குழந்தைக்குத் தாயாக என சமந்தாவின் நடிப்பிலும், பாங்கிலும் இன்னும் முதிர்ச்சி தெரிந்தது. மூன்றாவது முறையாக விஜய்யுடன் 'மெர்சல்' படத்திலும் இணைந்து 'நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்' என ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தார்.

இரட்டை ஃபிலிம்ஃபேர் விருதுகள்

இரட்டை ஃபிலிம்ஃபேர் விருதுகள்

தன் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த 'மனம்' படத்திற்காகவும், விஜய்யுடன் நடித்த 'கத்தி' படத்திற்காகவும் ஒரே மேடையில் இரட்டை ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றார் சமந்தா. இதற்கு முன்பு இப்படி இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளை ஒரே மேடையில் பெற்றவர் ரேவதி. இன்னொரு ஒற்றுமையும் உண்டு. ரேவதிதான் சமந்தாவின் இன்ஸ்பயரிங் ரோல் மாடல். 'கடல்', 'ஐ', 'பாகுபலி' ஆகியவை சமந்தா நடிக்கவிருந்து மிஸ் ஆன திரைப்படங்கள்.

திருமணத்திற்குப் பிறகு

திருமணத்திற்குப் பிறகு

நாக சைதன்யாவுடனான காதல் திருமணத்தில் இணைய, இப்போதும் நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சமந்தா. சமீபத்தில் வெளிவந்த 'ரங்கஸ்தலம்' படத்தில் சமந்தாவின் அசத்தலான பெர்ஃபார்மன்ஸுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு. சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய் சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ்', விஷாலுடன் 'இரும்புத்திரை' 'யு டர்ன்' ரீமேக் என வரிசையாக படங்களின் வருகைக்கு சம்மு ரசிகர்கள் வெறித்தன வெய்ட்டிங்.

சினிமா

சினிமா

"இந்த உலகில் என்னை விட அழகான பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னை விட திறமைசாலிகளும் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் கடவுள் எனக்குக் கதாநாயகி என்ற சிறப்பைத் தந்திருக்கிறார். எனவே சினிமா தொழிலை உயர்வாக நேசிக்கிறேன். சினிமா மீது எனக்குள்ள காதலுக்கு எல்லையே கிடையாது. எப்போதும் படப்பிடிப்பை விட்டு வீட்டுக்கு செல்ல விருப்பம் இல்லை. படப்பிடிப்பில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது. சினிமாவே எனது வாழ்க்கையாகவும் மாறி விட்டது" என்று சமந்தா கூறியுள்ளதே சினிமா மீதான அவரது காதலுக்குச் சாட்சி.

பிரத்யுஷா

பிரத்யுஷா

சம்முவின் உண்மையான பெயர் யசோதா. சமந்தா எனும் பெயருக்கான பொருள் - 'கடவுள் அவர்கள் கோரிக்கையைக் கேட்டார்' என்பதாகும். ஆதரவற்றோருக்கு உதவுவதில் மிகுந்த விருப்பம் கொண்ட சமந்தா விளம்பரங்கள் மற்றும் திறப்பு விழாக்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தை 'பிரத்யுஷா டிரஸ்ட்' எனும் அமைப்பின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் மருத்துவ செலவுக்குப் பயன்படுத்தி வருகிறார். ஆம், கடவுள் அவர்கள் கோரிக்கையைக் கேட்டார். இன்று போல் எப்போதும் வாழ்ந்திருங்கள் சம்மு!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Samantha is the one of the top actress in Tamil and Telugu cinema. A modeling opportunity came from a photograph taken by a friend's birthday party.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more