ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யப்போகிறாரா சமந்தா..?
ஹைதராபாத்: ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரபல நடிகை சமந்தா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இப்போது தேர்தல் பிரசாரமெல்லாம் நட்சத்திரப் பிரசாரமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் நடிகர் நடிகையர் முகம்தான் பளிச்செனத் தெரிகிறது.
தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் கூட நடிகர் நடிகையர் பலரும் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.

லோக்சபா தேர்தலுக்காக
லோக்சபா தேர்தலையொட்டி நாடு முழுவதும் பல பிரபல நடிகர், நடிகைகள் தங்களுக்கு பிடித்தமான கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சமந்தாவும் குதிப்பாரா
அந்தவகையில் பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையான சமந்தாவும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரஸ் மேக்கரின் அப்பாவுக்கோசரம்
காரணம் நடிகை சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளரான கோனா நீரஜாவின் தந்தை கோனா ரகுபதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார்.

வருவாரா சமந்தா
எனவே, அவருக்கு ஆதரவாக சமந்தா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் எனத் தெரிகிறது.

நம்ம ஊரைப் போல
தமிழகத்தில் விந்தியா உள்பட பல நடிகையர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே பாணியில் சமந்தாவும் ஆந்திராவைக் கலக்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











