கத்தி படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய சமந்தா - கேக் ஊட்டி வாழ்த்துச் சொன்ன விஜய்!
சென்னை: நடிகை சமந்தா தன் பிறந்த நாளை கத்தி படப்பிடிப்பில் சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் கொண்டாடினார்.
நடிகை சமந்தா தமிழில் பெரிய படங்களின் நாயகியாக மாறியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் கையைவிட்டுப் போன படங்கள் எல்லாம், இப்போது மீண்டும் அவருக்குக் கிடைத்துள்ளன.

பெரிய படங்கள்
சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும், விஜய் ஜோடியாக கத்தி படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா. மேலும் சில பெரிய படங்களுக்கும் நாயகியாக பேசப்பட்டு வருகிறார்.

பிறந்த நாள்
இந்த நிலையின், தனது 27 வது பிறந்த நாளை நேற்று கத்தி படப்பிடிப்பில் கொண்டாடினார். அவருக்காக பெரிய சாக்லேட் கேக் வரவழைத்திருந்தார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

விஜய் வாழ்த்து
கேக் வெட்டிய சமந்தாவுக்கு, அதில் ஒரு துண்டை ஊட்டி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் விஜய். இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் அய்ங்கரன் கருணா உள்ளிட்டோரும் சமந்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த ஆண்டை விட...
கடந்த ஆண்டை விட இந்தப் பிறந்த நாள் அவருக்கு ரொம்ப ஸ்பெஷலாக அமைந்துள்ளது. காரணம் நீதானே என் பொன் வசந்தத்துக்குப் பிறகு அவரது படங்கள் எதுவும் தமிழில் வரவில்லை. ஆனால் இந்த ஆண்டு அஞ்சானும், கத்தியும் வெளியாகவிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











