விவாகரத்தை மறக்க.. சமந்தா வீட்டில் நடந்த கொண்டாட்டம்… வைரலாகும் போட்டோஸ் !
சென்னை : நடிகை சமந்தா தனது செல்ல நாயான ஹாஷின் மூன்றாவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமந்தாவின் செல்லப்பிராணிக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி நடிகை
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா, நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பலத்திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாக சைத்தான்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை நீக்கிவிட்டு 'S' என போட்டுஇருந்தார். இதுபரபரப்பாக பேசப்பட்டது.

பிரிந்தார்
கடந்த செப்டம்பர் மாதம் தங்களது பிரிவு பற்றி அறிவித்தனர். அதன்பின் சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் நாக சைத்தன்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார். மன உளைச்சலில் இருந்த சமந்த ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

செல்ல நாய்குட்டி
இந்நிலையில் , நடிகை சமந்தா, தனது செல்ல நாயான ஹாஷின் மூன்றாவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். மூன்றாவது பிறந்தநாளுக்கு, ஹாஷ்க்கு ஸ்டைலான கோட்-சூட் உடையை அணிவித்து இருந்தார், செல்லப் பிராணிகளுக்கு ஏற்ற கேக்கை ஹாஷ்க்கு ஊட்டி விட்டார். நாக சைதன்யாவை பிரிந்த பிறகு முதல் முறையாக தனது செல்ல நாய் ஹாஷின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் சமந்தா.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாயை, சமந்தாவும் நாக சைத்தன்யாவும் தத்தெடுத்து ஹாஷ் அக்கினேனி என்று அழைத்து வந்தனர்.

வாழ்த்து சொல்லவில்லை
சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா நவம்பர் 23ந் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு சமந்தா வாழ்த்து சொல்லுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவர் வாழ்த்து சொல்லவில்லை. ஆனால், தற்போது நாய்க்கு சமந்தா பிறந்தநாள் கொண்டாடி உள்ளார்.


Click it and Unblock the Notifications











