காதல் விவகாரம்: செல் நம்பரை மாற்றிய சமந்தா
நடிகை சமந்தா தன்னுடைய செல் நம்பரை மாற்றிவிட்டாராம். நெருங்கிய தோழிகளுக்குக் கூட தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கிறாராம். இதற்கு காரணம் காதல் விவகாரம்தான் என்கின்றனர்.
சினிமா உலகின் இப்போதைய காதல் கிசு கிசு சமந்தா சித்தார்த் பற்றியதுதான். திருமணமே முடிந்துவிட்டது என்று ஒருநாளைக்கு செய்தி வெளியாகிறது. மறுநாள் அதெல்லாம் இல்லை நாங்கள் நண்பர்கள்தான் என்று செய்தி வரும்.
இப்படி மாறி மாறி செய்திகள் வெளியாவதால் சமந்தாதான் அப்செட் ஆகியிருக்கிறார். தன்னைப் பற்றிய காதல் செய்தி கசிவதற்கு காரணம் தன்னுடைய நெருங்கிய தோழிகள்தான் என்பது சமந்தாவின் எண்ணம். அதனால் செல் நம்பரை மாற்றிவிட்டாராம் சமந்தா.

சித்தார்த் சமந்தா ஜோடி
சித்தார்த்தும் சமந்தாவும் சென்னை வாசிகள். சமந்தா படித்தது சென்னை ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில். சித்தார்த் தேவ் பாய்ஸ் பள்ளியில் படித்தார். சமந்தா மாடலாக இருக்கும் போதே இருவருக்கும் அறிமுகம் உண்டாம்.

தோல் நோயால் அவதி
அழகு சமந்தாவிற்கு சரும நோய் ஏற்படவே மணிரத்னம், ஷங்கர் படங்களில் இருந்து விலக நேரிட்டது. அப்போது ஆறுதலாக இருந்தது சித்தார்த் தானம்.

முதல் முதலாய் ஜோடி
சித்தார்த் உடன் முதன் முதலாக ஜபர்தஸ்த் படத்தில்தான் ஜோடி சேர்ந்தார் சமந்தா.

காதல் ராசியில்லையே
சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். பாலிவுட்டில் பட்டோடி மகள் சோகா அலிகான், கோலிவுட்டில் கமல் மகள் ஸ்ருதி என லிவ் இன் வாழ்க்கை நடத்தியும் பிரிவுதான் ஏற்பட்டது.

காதல் கைகூட பூஜை
சமந்தா உடன் காதல் கை கூடி திருமணத்தில் முடிய வேண்டும் என்றுதான் சமீபத்தில் காளகஸ்தி சென்று தோஷ நிவாரண பூஜை செய்திருக்கின்றனர் இந்த ஜோடி

தெலுங்கில் சூப்பர்
சித்தார்த்திற்கு தெலுங்கு மார்க்கெட் நன்றாக இருக்கிறது. சமந்தாவிற்கு தமிழ், தெலுங்கு இரண்டிலும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. என பட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர் இந்த ஜோடி.

காதல் கசிய காரணம்
ஆனால் தங்களின் காதல் கசிய தன்னுடைய நெருங்கிய தோழிகள்தான் காரணம் என்று நினைக்கும் சமந்தா தன்னுடைய செல் நம்பரை மாற்றிவிட்டாராம். இதனால் சித்தார்த் உடனான காதல் பற்றி அப்டேட் செய்தி தெரியாமல் அவதிப்படுகின்றனர் தோழிகள். பத்திரிக்கையாளர்களும்தான்.


Click it and Unblock the Notifications











