Don't Miss!
- News
சர்ச்சை.. பிரதமர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்காத மத்திய அமைச்சர்! மனோ தங்கராஜ் கண்டனம்
- Finance
16 வயது இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலை கொடுத்த நிறுவனம்: சம்பளம் எவ்வளவு தெரியுமா?
- Automobiles
ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Technology
Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்.. ஆரஞ்சு நிறத்தில் அட்டகாச லுக்.. எப்போ வாங்கலாம்?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மோனோகினியில் கதறவிடும் நடிகை சமந்தா... விவாகரத்துக்கு பிறகு வேற லெவல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்!
சென்னை: நடிகை சமந்தா கோவா பீச்சில் மோனோகினியில் ஆட்டம் போட்டுள்ள வீடியோ இன்ஸ்டாவை திணறடித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஹாலிவுட் படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது.
நடிகை
அமலா
சினிமாவுக்கு
ரீ-என்ட்ரி
கொடுக்கும்
கணம்...டீசர்
அப்டேட்
வெளியானது.!

பெயர்கள் மட்டுமே மாறியது
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் பிரிவதாக அறிவித்தனர். சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்ட அந்த அறிக்கையில் இருவரின் பெயர்களும் மாறி இருந்ததே தவிர வேறு எந்த விஷயமும் மாறவில்லை.

விவாகரத்துக்கு காரணம்
விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தாவோ அல்லது நாக சைதன்யாவோ அதற்கான காரணம் குறித்து நேரடியாக பேசவில்லை. ஆனால் சமந்தா நடித்த சில சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரங்களும் காட்சிகளுமே அவரது விவாகரத்துக்கு காரணம் என கூறப்பட்டது.

சங்கடப்படுத்தும் கதாப்பாத்திரங்கள்
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாக சைதன்யா, தனது குடும்பத்தினரை சங்கடப்படுத்தும் கதாப்பாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்றார். இதனை கேட்ட ரசிகர்கள், சமந்தா நடித்த சில கதாப்பாத்திரங்கள்தான் பிரச்சனைக்கு காரணமா என்று கேட்டு வந்தனர்.

ஆன்மிக சுற்றுலா சென்ற சமந்தா
ஆனால் தனது விவாகரத்து தொடர்பாக நடிகை சமந்தா இதுவரை யார் மீதும் எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை. விவாகரத்து ஆன கையோடு, ரிஷிகேஷ், உத்தரகாண்ட் என ஆன்மிக சுற்றுலா சென்ற நடிகை சமந்தா அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.

மோனோகினியில் ஆட்டம்
இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது கோவாவில் சில் செய்து வருகிறார். கோவா பீச்சில் மோனோகியில் செம ஆட்டம் போட்டுள்ளார் சமந்தா. மோனோகினியில் பீச்சில் ஆட்டம் போட்டுள்ள போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார் நடிகை சமந்தா.

குவியும் லைக்ஸ்
நடிகை சமந்தாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் அன்ட் க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர். இதேபோல் பிரபலங்கள் பலரும் சமந்தாவின் இந்த போட்டோவுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். நடிகை சமந்தாவின் இந்த போட்டோ ஷேர் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே 8 லட்சம் லைக்ஸ்களை குவித்துள்ளது.