twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோக்களும்தான் கொடுக்கிறாங்க... ஒரு படம் அவுட் ஆனா, ஃபிளாப் ஹீரோயினா? பிரபல நடிகை பாய்ச்சல்!

    By
    |

    சென்னை: ஒரு படம் ஓடாததால் நடிகையை மட்டும் பிளாப் ஹீரோயின் என்று சொல்வது ஏன் என்று தெரியவில்லை என நடிகை சமந்தா சாடியுள்ளார்.

    Recommended Video

    Cinema Square: இன்றைய சினிமா செய்திகள்

    தமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் சமந்தா.

    இப்போது தமிழில், விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடிக்க இருக்கிறார்.

    தெலுங்கு, தமிழில்

    தெலுங்கு, தமிழில்

    தெலுங்கிலும் நடித்து வரும் சமந்தா, நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் விழந்தார். பிறகு இருவீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, தெலுங்கு, தமிழில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழில் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார் சமந்தா.

    நெருக்கமான படம்

    நெருக்கமான படம்

    விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்திருந்தனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கினார். படத்துக்கு ஜானு என்று டைட்டில் வைத்திருந்தனர். இது, 'என் மனதுக்கு நெருக்கமான படம் இது. இதன் ரீமேக்கில் நடிக்கவில்லை என்றால் வருத்தப்பட்டிருப்பேன்' என்று கூறியிருந்தார் சமந்தா.

    அதிதி ராவ்

    அதிதி ராவ்

    ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் அவர் அப்செட் ஆனார். இந்நிலையில் ஷர்வானந்துடன் மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் சமந்தா. 'ஜானு' தோல்வி அடைந்ததால், அந்த ஜோடி வேண்டாம் என்று தயாரிப்பாளர் முடிவு செய்தார். இதனால், சமந்தாவை நீக்கிவிட்டு அதிதி ராவ் ஹைதாரியை ஒப்பந்தம் செய்தனர்.

    ஃபிளாப் ஹீரோயின்

    ஃபிளாப் ஹீரோயின்

    சமந்தா தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் சில இணைய இதழ்கள் அவரை, ஃபிளாப் ஹீரோயின் என்று குறிப் பிட்டிருந்தன. இதனால் கடுப்பான நடிகை அதிதி ராவ், அந்த இதழை டேக் செய்து, ட்விட்டரில் விமர்சித்தார். ' வெற்றியோ, தோல்வியோ ஒரு நடிகர், நடிகையின் நம்பகத்தன்மையை பாதிக்காது என்பதை இங்கே சொல்வது முக்கியம் என்று நினைக்கிறேன்' என்றார்.

    குறை கூறுகிறார்கள்

    குறை கூறுகிறார்கள்

    இந்நிலையில் இதுபற்றி கருத்து ஏதும் சொல்லாமல் இருந்த சமந்தாவிடம் இதுபற்றி கேட்டபோது, 'ஒரு ஹீரோ தொடர்ந்து 3 படங்கள் பிளாப் கொடுத்தாலும் அடுத்த படம் வரும்போது அவரது ரசிகர்கள் தியேட்டரில் போய் பார்ப்பார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் ஹீரோயினை குறை கூறுகிறார்கள். அதோடு ஹீரோக்களை போல ஹீரோயின்களுக்கு ஏன் சம்பளம் கொடுப்பதில்லை என்பது பற்றியும் புரியவில்லை. பெண்கள், பெண்களைப் போலவே கடுமையாக உழைக்கிறார்கள் என்றார்.

    English summary
    samantha says, 'Even if a star hero gets 3 back-to-back flops, people would still go and watch his fourth film in the theaters. unfortunately, they blame the heroine for the film’s flop'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X