வில்லி சமந்தா ரெடி.. டப்பிங்கை முடிச்சுட்டாராம்.. சீக்கிரமே ரசிகர்களுக்கு தரிசனம் தரப் போறாரு!
சென்னை: நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் நடிகை சமந்தா, பாலிவுட்டில் வெப்சீரிஸ் மூலமாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெற்றியடைந்த முதல் சீசனை தொடர்ந்து வெளியாகவுள்ள 2வது சீசனில் சமந்தா வில்லி அவதாரம் எடுத்துள்ளார்.

வெப்சீரிஸ் பக்கம்
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. திரைப்படங்களுக்கு நிகராக தற்போது வெப்சீரிஸ்களும் உருவாகி வருவதால், வெப்சீரிஸ் பக்கமும் தான் போய் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமே என நினைத்த சமந்தா, இந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

தி ஃபேமிலி மேன்
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, நீரஜ் மகாதேவ், கிஷோர் மற்றும் குல் பனாக் நடிப்பில் போன வருஷம் செப்டம்பரில் வெளியான முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 10 எபிசோடுகளாக வந்த முதல் பாகம் குடும்ப சென்ட்டிமென்ட்டுகள் மற்றும் ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருந்தது.

வில்லியாக சமந்தா
இந்நிலையில், இரண்டாவது சீசனில் நடிகை சமந்தா நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த நவம்பர் மாதம் வெப்சீரிஸ் படப்பிடிப்புகள் தொடங்கி, கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக 90 சதவீத படப்பிடிப்புகளை முடித்து விட்டனர். சமந்தா தனது போர்ஷனை ஏற்கனவே முழுவதுமாக முடித்து விட்டேன் என அறிவித்து இருந்தார்.

டப்பிங்கை முடித்த சமந்தா
இந்நிலையில், தற்போது தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ்க்கான டப்பிங் பணியை நடிகை சமந்தா முடித்துள்ளார். இந்த ஃபேமிலி மேன் சிரீஸ்க்காக ஒர்க் பண்ணது ரொம்ப "Kick A**" ஆக இருந்தது என நடிகை சமந்தா கூறியிருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. வெகு விரைவிலேயே அமேசான் பிரைமில் இந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளது.

திரைப்படங்கள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படம் என சினிமாவிலும் நடிகை சமந்தா பிசியாகவே உள்ளார். லாக்டவுனில், யோகா, வொர்க்கவுட் எல்லாம் செய்து, ரொம்பவே ஸ்லிம்மாகவும் க்யூட்டாகவும் சமந்தா மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











