நடிகை சமந்தாவுக்கு நாளை மறக்க முடியாத டே... ஏன், எதுக்குன்னு சொன்னா நிஜமாவே ஆச்சரியப்படுவீங்க!

By

சென்னை: நடிகை சமந்தாவின் வாழ்க்கையில், நாளைய தினம் மிக முக்கிய நாள் என்றும் அதை சிறப்பாகக் கொண்டாட அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Recommended Video

Kaathuvaakula Renduu Kaadhal | Vignesh Shivan | Nayanthara | Samantha | VJS

தமிழில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சமந்தா, இந்தப் படத்தில் தெலுங்கு பதிப்பில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்தப் படம்தான் அவரது முதல் சினிமா அறிமுகம். பிறகு, பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல படங்களில் நடித்து ஸ்டார் ஹீரோயின் ஆனார் சமந்தா.

திருமணத்துக்குப் பிறகும்

திருமணத்துக்குப் பிறகும்

பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர் நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்தபோது காதலில் விழுந்தார். நாகசைதன்யா நடிகர் நாகார்ஜுனாவின் மகன். சில வருடங்களாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் கோவாவில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் சமந்தா.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

தமிழ், தெலுங்கில் பிசியாக இருக்கிறார். கடைசியாக தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். அடுத்து, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் என்ற நடிக்க இருக்கிறார். இதில் இன்னொரு ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ. இதன் அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியானது. படப்பிடிப்பு, ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.

தெலுங்கு கோடீஸ்வரி

தெலுங்கு கோடீஸ்வரி

இதற்கிடையே, அவர் தெலுங்கு கோடீஸ்வரி நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், இது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் சமந்தா சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியுள்ளன. சமந்தா நடித்த முதல் படமான 'விண்ணைத் தாண்டி வருவாயா'வும் அதன் தெலுங்கு பதிப்பான 'ஏ மாயா சேசவே'வும் 2010 ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியாயின.

வருங்கால கணவர்

வருங்கால கணவர்

சமந்தாவுக்கு 'ஏ மாயா சேசவே' முக்கியமான படம். இந்தக் காதல் கதையில், தனது ஜோடியாக நடிப்பது வருங்கால கணவர் என்பது அப்போது சமந்தாவுக்குத் தெரிந்திருக்காது. பிறகுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் வரை சென்றனர். அதனால், இந்த தினத்தை நடிகை சமந்தா சிறப்பாகக் கொண்டாட இருப்பதாகச் சொல்கிறார்கள், டோலிவுட்டில்!

ரசிகர்களுக்கு நன்றி

இந்நிலையில் 10 வருடம் ஆனதை அடுத்து சமூக வலைத்தளங்களில் சிறப்பு மோஷன் போஸ்டர்களை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தப் போஸ்டர்கள் வேகமாக பரவி வருகின்றன. இதற்கிடையே, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார், சமந்தா. 'என்னை ராணியாக உணர வைப்பதற்கு நன்றி. எனது ஏற்ற இறக்கங்களில் என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் உங்கள் அன்புக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X