சமந்தா மீண்டும் தோல் நோயால் அவதி: முகம் முழுவதும் சிவப்பு புள்ளிகள்

By Siva

சென்னை: நடிகை சமந்தாவுக்கு மீண்டு தோல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்யாவுடன் அவர் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா கடந்த 1 ஆண்டுக்கு முன்பு தோல் நோயால் அவதிப்பட்டார். இதனால் அவர் மணிரத்னத்தின் கடல் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

அவரது முகம் மற்றும் உடம்பில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

குணமடைந்தார்

குணமடைந்தார்

சிகிச்சை பெற்று குணமடைந்து வந்த சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இனி தன்னைத் தேடி வரும் படங்களில் எல்லாம் நடிக்காமல் நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து தான் நடிக்கப் போவதாக சமந்தா அறிவித்தார்.

சூர்யா

சூர்யா

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இரண்டு கெட்டப்புகளில் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் செய்தார்கள். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 10 நாட்கள் நடந்தது.

மீண்டும் பாதிப்பு

மீண்டும் பாதிப்பு

சூர்யா-சமந்தா வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சமந்தாவுக்கு மீண்டும் தோல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவருடைய முகம் மற்றும் உடம்பில் மீண்டும் சிவப்பு புள்ளிகள் தோன்றின.

படப்பிடிப்பு ரத்து

படப்பிடிப்பு ரத்து

சமந்தாவுக்கு தோல் பிரச்சனை ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். சமந்தாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சக்திவாய்ந்த விளக்கு வெளிச்சத்தில் நின்று நடிப்பது தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து சமந்தா இல்லாத காட்சிகளை படமாக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X